பக்கம்:பாவைப் பாட்டு.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 -

பாவைப் பாட்டு

போன்று திகழும் சிக்பெருமான் தீர்த்தன்” என அழைக்கப் படுவதிலிருந்து அவன் அக இருளைப் போக்குவான் என்பது தெளிவுறும்.

‘சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே”

என்று திருவாலங்காட்டுத் திருத்தாண்டகம் பேசும். குளத்தில் நீராடிப் புறத்துய்மையைப் பெற்ற கன்னியர்கள் அகத்துாய் மையும் ஒருங்கே பெறவேண்டித் தீர்த்தனாய் விளங்கும் ஈசனை நினைந்து வழிபட்டார்கள்.

‘தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தன்’

என்று அடுத்து மொழிந்தனர். கோயில் என்ற சொல் சைவர்களுக்குத் தில்லை என்று வழங்கும் சிதம்பரத்தலத் தைக் குறிக்கும். அகண்ட வெளியையே தான் கூத்தாடும் அரங்கமாகக் கொண்டு தில்லைக் கூத்தன் திருக்கூத்து நிகழ்த்துகின்றார். ஆகவே, நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தன் என்று கூறினர். பொறுக்கமுடியாத அனலைக் கையில் ஏந்தித் திருக்கத்தி நிகழ்த்துபவன் சிவன் ஆதலின் அவனைத் தீயாடும் கத்தின் என்று விளக்கினர். தில்லைச் சிற்றம்பலத்தான் ‘சாந்திக் கூத்தினை நிகழ்த்தி இவ்வுலகத்தே தோன்றிய உயிர்களின் பிறவி வெப்பத்தினை மாற்றி, இன்பமும் அமைதியும் பெற இயங்குபவன் ஆவன். ஐம்பூதங்களையும். ஆட்படுத்தி, ஐந்தொழில்களையும் இயற்றும் இறைவன் உலக உயிர்களின் நன்மைக்காகவே இருக்கின்றான். வான், காற்று, நீர், நெருப்பு, நிலம் எனும் ஐம்பூதங்களையும் சுட்டுவான் வேண்டி அமையும் வானை யும், இறுதியில் அமையும் நிலத்தையும் “வானும் குவலயமும்’ என்று கூறி, மற்ற மூன்று பூதத்தினையும் குறிப்பால் உய்த் துணர்த்தினார், இறைவன் புரியும் ஐந்தொழில்கள் படைத் தல், காத்தல், கரத்தல், மை றத்தல், அருளல் என்பனவாகும். காத்தவில் மறைப்பும், அழித்தவில் அருளலும் அடங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/51&oldid=592321" இலிருந்து மீள்விக்கப்பட்டது