பக்கம்:பாவைப் பாட்டு.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பா. 51

என்று ஆன்றோர் மொழிவர். எனவே. காத்தல், படைத்தல், அழித்தல் எனும் முத்தொழிலையும் முறையே ஆற்றுபவன் சிவபெருமான் என்பது ஈண்டுப் பெறப்பட்டது.

ஒம் நமசிவாய’ எனும் திருவைந்தெழுத்தினை ஒதி, கன்னியர்கள் தங்கள் கைகளில் அணிந்திருக்கும் வளையல்கள் ஒலி எழுப்பவும், இடையில் அணிந்துள்ள மேகலைகள், பேரொலியைப் பிறப்பிக்கவும். பூக்களால் புனையப்பட்ட தங்கள் கூந்தலின் மேல் வண்டுகள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்யவும், செந்தாமரை மலர்கள் செக்கச் செவேலெனப் பூத்துக்குலுங்கும் பொய்கையில் மூழ்கி நீரினுள் துளைந்து துளைந்து ஆடிச் சிவபிரானது அழகிய திருவடிகளை வழுத்தி, அவனருளாலே அவன்தாள் அடையவேண்டுமென்று கன்னிப் பெண்கள் நீராடிய பாங்கினை அத்திருப்பாட்டு உணர்த்து சின்றது.

‘ஆர்த்த பிறவித்

துயர்கெடகாம் ஆர்த்தாடும் தீர்த்தன் கற் றில்லைச்சிற்

றம்பலத்தே தீயாடும் கூத்தன்! இவ் வானும்

குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும்

கரந்தும் விளையாடி வார்த்தையும்பேசி

வளைசிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவஞ் செய்ய

அணிகுழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை

குடைந்துடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனைநீர்

ஆடேலோர் எம்பாவாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/52&oldid=592322" இலிருந்து மீள்விக்கப்பட்டது