பக்கம்:பாவைப் பாட்டு.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதின்மூன்றாவது திருப்பாடல்

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி என்று தமிழ்க் குடியின் பழமையினை யும், பெருமையினையும் புறப்பொருள் வெண்பாமாலை தந்த சேரன் ஐயனாரிதனார் மொழிவார். வரலாற்றின் தொன்மைக்கு இலக்காகவுள்ள இனமாகப் பேசப்படுகின்ற தமிழினம் தொன்றுதொட்டே இயற்கையில் ஈடுபாடு கொண்டு திளைத்தது. காலப்பழமை வாய்ந்த தொல் காப்பியம், முதற்பொருள் என்று நிலத்தையும், பொழு தினையும் சுட்டுவதானது இயற்கைக்கு ஏற்றம் தருகின்றது. இயற்கையின் இனிய பின்னணியில் மனித வாழ்வு சிறந் திருந்தது. இயற்கை பூத்துக்குலுங்கும் தமிழகத்தில் எளி லார்ந்த இயற்கைக் காட்சிகளைக் காலந்தோறும் வாழ்ந்த கவிஞர்கள் சிறப்பாக வருணித்துப் போந்தனர். திருஞான சம்பந்தரின்திருவையாற்றுப் பதிகம் இதற்குச்சான்று பகரும்.

‘பைங்குவளைக் கார்மலரால்

செங்கமலப் பைம்போதால்”

எனத் தொடங்கும் இத்திருப்பாட்டு, தொடக்கத்திலேயே இனிய இயற்கை வருனனையினைக் கொண்டு நிற்கின்றது. இந்தத் தொடக்க அடியே உமாதேவியாரைக் குறிப்பது போல் அமைந்துள்ளது. இந்தத் தொடரே முரண்றொடை எனும் இலக்கிய நயத்திற்கு இடமாக அமைந்துள்ளது. பசுமை தங்கிய குவளை மலர் போன்ற கருமையும் அழகும் பொதிந்த கண்கள் உமையம்மைக்கு உரிமையுடையன வாகும். உமாதேவியாரின் திருமுகமோவெனில் செந்தாமரை மலரின் அழகினை நினைவூட்டுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/53&oldid=592323" இலிருந்து மீள்விக்கப்பட்டது