பக்கம்:பாவைப் பாட்டு.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. ur. .53

பிராட்டியாரின் கைகளில் வளையல்கள் குலுங்குகின்றன. பின்னிய பாம்புகள் அணிகலன்களாக அமைந்துள்ளன. மும்மலம் அகலவேண்டும் எனும் நோக்கில் முறையாக வந்த இறைவியாம் உமாதேவியையும், இறைவனாம் சிவபெருமா னையும் வேண்டி வரம்பெறும் நோக்கோடு வந்துள்ள கன்னிப்பெண்கள் தம் பெருத்த மடுவினை உமாதேவியோடு ஒப்பிட்டுக் காண்கிறார்கள். -

இதே தொடர் இறைவனுக்கும் பொருந்துவதாய உள்ளது. இறைவனின் திருக்கழுத்து, குவளை போன்று கரிய நிறம் அமைந்த திருநீலகண்டமாகத் திகழ்கின்றது. செந்தாமரை போலும், செம்மேனியுடையவனாகக் காட்சி தருகின்றார். உடலில் வெண்ணிறு பூசி, பின்னிய பாம்புகள் கழுத்தில் தொங்க, தன்னை ஆண்டிவந்த உயிர்களின் மும்மலத்தின்ன அழித்து வீடுபேறு நல்கும் பெருந்தகையாக அச்சிவபெருமான் தோற்றமளிக்கின்றார்.

உமாதேவி, உமைகேள்வன் சிவன் ஆகிய இருவரையுமே நினைவூட்டும் போக்கில் இந்த வருணனை அமைந்து இருப்பதனை ஆழ்ந்து பார்த்தால் விளங்கும். குவளைபோல் கருமேனியுடைய திருமேனி பெற்றவர் பிராட்டியார். சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி அம்மான் தன்னையும் இவ்வருணனைகள் கட்டுகின்றன. கைகளில் வளையல்களின் சட்டம் என்பதினாலே உமாதேவியினையும், பின்னிய பாம்புகளை அணிகலன்களாக அணிந்துகொண்ட பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் சிவபெருமான் என்பதனையும் இப் பாட்டின் தொடக்கம் தெளிவுறுத்துகின்றது. தாங்கள் நீராடும் பொய்கை, பிராட்டியாரையும், பிரானாரையும் ஒருசேர ஒத்து விளங்குகின்றது என்பது கன்னியர்கள் துணியாகும்.

~uт. 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/54&oldid=592325" இலிருந்து மீள்விக்கப்பட்டது