பக்கம்:பாவைப் பாட்டு.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பாவைப் பாட்டு

உமையம்மையும் சிவபரம்பொருளும் ஒத்துக் காணப் படுகின்ற மடுவில் புகுந்து தாவித்தாவி, நீந்தி. சசிகு வளையல்கள் ஒலி செய்ய, காற்சிலம்புகள் பேரொலி எழுப்ப: நீராடுவதனால் நீர்மட்டம் மேலும் கீழுமாய் அலைபாய அக்கன்னியர்கள் மகிழ்ச்சியுடன் நீராடுகிறார்கள்.

அனைத்துப் பொருள்களிலும் நீக்கமற நிறைந் திருக்கும் இறைவனைப் பொய்கை மடுவிலும் கண்டு நீராடிய பெண்களின் சிறப்பினை இத்திருப்பாட்டு நலில்கின்றது.

“பைங்குவளைக் கார்மலரால்

செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தால்

பின்னும் அரவத்தால் தங்கண் மலங்கழுவு

வார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும்

எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற்

புகப்பாய்ந்து பாய்ந்துகஞ் சங்கஞ் சிலம்பச்

சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக்

குடையும் புனல்பொங்கப் பங்கயப் பூம்புனல்பாய்க்

தாடேலோர் எம்பாவாய்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/55&oldid=592326" இலிருந்து மீள்விக்கப்பட்டது