பக்கம்:பாவைப் பாட்டு.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினான்காவது திருப்பாடல்

L} தின்மூன் றாவது திருப்பாட்டில் வைகறையில் துயிலெழுந்து நீராட நீர் நிலைகளை நோக்கிச் சென்ற கன்னி யர்கள் தாமரைத் தடாகத்தில் பாய்ந்து பாய்ந்து முகேரென் னக் குடைந்து குடைந்து சிவன் கழலே சிந்திக்கும் பான்மை யராய் விளங்கிய திறத்தினை மணிவாசகர் குறிப்பிட்டார். இத்திருப்பாட்டில் கன்னிப் பெண்கள் தங்கள் உடம்பின் பல் வேறு இடங்களிலும் அணிந்திருந்த அணிகலன்களைக் குறிப் பிடுவார் போலப் பாட்டின் தொடக்கத்திலேயே

‘காதார் குழையாட’ என்று தொடங்கினார்.

முதல் தொடர் ‘காதார் குழை’ என்பதாகும். குழை’ என்பது மகளிர் காதுகளில் அணியும் ஓர் அணியாகும். தொடக்க காலத்தில் ஒலையால் அமைந்ததாக இருந்த இக் குழை, காலப்போக்கில் பொன்னாக மாறிப் போந்தது. “குழை என்ற சொல் தளிர்க்கும் இளந்தளிரைக் குறிக்கும். இளம் தளிர் போலும் குழையினைத் தம் காதுகளில் அணிந் திருந்த கன்னியர்கள், அக் குழை அசைந்து ஆடும் நிலையில் பொய்கையிலே நீராடினார்கள்.

இரண்டாவது தொடர் பைம்பூண் கலனாட’ என்ப தாகும். அக்காலத்தில் பசிய பொன்னாலாகிய அணிகலன் ‘பைம்பூண் எனப்பட்டது. நீராடுகின்ற பொழுதும் தாங்கள் அணிந்திருந்த பொற்கலன்களை நீக்கவில்லை என்பது அம் மக்களின் செல்வச் செழிப்பை எடுத்துக்காட்டுவதாகும். குழை ஆடியபொழுது கன்னியர்களின் செவியும், தலையும் அதைத் தாங்கி நிற்கும் கழுத்தும் அசைந்தன என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/56&oldid=592327" இலிருந்து மீள்விக்கப்பட்டது