பக்கம்:பாவைப் பாட்டு.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பாவைப் பாட்டு

முதற்கண் பெறப்பட்டது. இப்பொழுது அவர்கள் உடல் உறுப்புகளில் அணிந்திருந்த அணிகலன்களும் அசைந்தன என்று கூறப்பட்டது. மூன்றாவது தொடர் கோதை குழலாட என்பதாகும். தலை அசைந்த காரணத்தால் அக்கரிய நெடிய கூந்தலும் அசைந்தது. நான்காவது தொடர் வண்டின் குழாமாட’ எனக் கிளத்தப்பட்டுள்ளது. அசையாத கூந்தலில் இதுகாறும் தங்கிக் கூந்தலில் சூடப்பெற்றிருந்த பூக்களில் அமைதியாக இருந்து தேனை உண்ட வண்டின் கூட்டங்கள் தேனாகிய மது உண்ட மயக்கத்தில் உறங்கிக் கிடந்தன. முதற் கண் காதில் அசைவும், அதனை அடுத்துத் தலையிலும், கழுத்திலும், உடல் உறுப்புகளிலும் எழுந்த அசைவுகள் கூந்தலை அசையச் செய்து அங்கே குடிகொண்டு இருந்த வண்டுக் கூட்டங்களையும் அசையவைத்தது. ‘வண்டின் குழாமாட’ என்று நான்காவது தொடர் நவிலப் பட்டது.

காதார் குழையாட, பைம்பூண் கலனாட, கோதை குழலாட, வண்டின் குழாமாட என்று நான்கு இடங்களில் இத்திருப்பாட்டில் ஆட, ஆட என்ற சொல் அமைந்துள்ளமை அறிந்து இன்புறத்தக்கது.

இனி, ஆடி’ என்ற சொல் வருகின்றது. “சீதப் புனலாடி’ என்ற தொடர் குளிர்ந்த நீர் நிலையில் கன்னியர்கள் நீராடு வதனைப் புலப்படுத்துகின்றது. சைவ சித்தாந்திகள் இவ்விடத்தில் வேறொரு விளக்கத்தினையும் தருவர்.

கேட்டலுடன் சிந்தித்தல் கிட்டை கிளத்தலென

ஈரிரண்டாம் கிளக்கின் ஞானம்’

-சுபக்கம்: 276 எனும் சிவஞான சித்தியார்ப் பாடலையும் கூறுவர், சிவஞான சித்தியாரின் சுபக்கப்பாடல் கொண்டு காது கேட்டலையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/57&oldid=592329" இலிருந்து மீள்விக்கப்பட்டது