பக்கம்:பாவைப் பாட்டு.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா, 57

பைம்பூண் கலன் சித்தித் தலையும், வண்டின் குழாம் நிட்.ை யினையும் குறிப்பாற் புலப்படுத்தி நிற்கின்றன என்பர்,

இனி, குளிர்ந்த நீரில் குளித்தெழுந்த கன்னிப் பெண்கள் சிற்றம்பலத்தைப் பாடினார்கள். அடுத்து நான்மறையும் பொருளாய் அமைந்த புண்ணியனின் புகழ்ப்பாடலைப் பாடினார்கள். அதன் பின்னர் புகழ்ப்பாடலால் சிறப்பித்துப் பேசப்பெறும் பொருளாய் விளங்குகின்ற திறத்தைப் பாடி னார்கள்: பின்னர் ஒளி வடிவமாய்த் திகழும் சிவபெருமானது சிறந்த பண்புகளைப் பாடினார்கள்.

சிவனென்னும் நாமம் தனக்கே உரிய செம்மேனி அம்மானாம் சிவபெருமானின் கொன்றை மாலையைப் பாடினார்கள். பின்னர், சிவன் உலகில் பிறந்த உயிர்களுக் கெல்லாம் ஆதியாய் அமைந்துள்ள தன்மையினைப் பாடி னார்கள். பின்னர் இவ்வுலகப் பொருள்கள் அனைத்திற்கும் முடிவிடமாய் உள்ள அவனின் தன்மையைப் பாடினார்கள். இதனையே திருவெம்பாவை, சீதப் புனலாடி சிற்றம் பலம்பாடி’, ‘வேதப் பொருள் பாடி’, ‘அப்பொருளா மாபாடி’ ‘சோதி திறம்பாடி’, ‘அந்தமா மாபாடி’, என்று குறிப்பிட் டுள்ளது,

திருப்பாட்டின் இறுதியில், இறைவியின் திருவடி மலர் களின் பெருமையைப் பாடுகிறார். உலகியலில் வெறுப்புத் தோன்றுமாறு செய்வித்து வேறுபடுத்தி, அவ் உயிர்களுக்குச் சிவஞான அமிர்தினை ஊட்டிப் பாதுகாத்துச் சிறப்புறத் துலங்கும் வளையல்கனை அணிந்த கைகளை உடைய உமா தேவியின் திருவடிப் பெருமை பேசி நீராடுவோம் என்று கன்னிப் பெண்கள் களிப்படைகின்றனர்,

ஞானம் வந்தால் பிறவி வெப்பத்தினை அகலச் செய்ய முனையும் போக்கு காணப்பெறும், முதற்படியாக, குளிர்ந்த குளத்தில் குதித்து எழுகின்றனர். அடுத்து, சிவன் கழலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/58&oldid=592330" இலிருந்து மீள்விக்கப்பட்டது