பக்கம்:பாவைப் பாட்டு.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பாவைப் பாட்டு

சிந்திக்கும் பான்மையராய்ச் சிற்றம்பலத்தைப் பாடி அங்கு முழுமுதற் பொருளாய் முகிழ்த்துள்ள எம்பெருமானைப் பாடிப் பரவுகின்றனர், முதலும் முடிவும் அற்றுத் திகழும் இறைவன் உயிர்களை உய்விப்பான் வேண்டி அவ்வுயிர்களுக்கு உலகியல் பில் ஒரு வெறுப்பு வருமாறு செய்வித்து, துன்பக் கடலினின்றும் தூக்கிக் கரை சேர்த்து, ‘இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை’ என உயிர்கள் நினைக்கும் வண்ணம் அமைத்துக் காட்டுவது அலகிலாத அவன் விளையாட் டினையும் அருள்மயமான அவனுடைய அன்புப் பெருக் கினையும் ஒருங்கே புலப்படுத்துவனவாகும்.

‘காதார் குழையாடப்

பைம்பூண் கலனாடக் கோதை குழலாட

வண்டின் குழாமாடச் சீதப் புனலாடிச்

சிற்றம் பலம்பாடி வேதப் பொருள்பாடி

அப்பொருளா மாபாடிச் சோதி திறம்பாடிச்

சூழ்கொன்றைத் தார் பாடி ஆதி திறம்பாடி

அந்தமா மாபாடிப் பேதித்து கம்மை

வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி

ஆடேலோர் எம்பாவாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/59&oldid=592331" இலிருந்து மீள்விக்கப்பட்டது