பக்கம்:பாவைப் பாட்டு.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினைந்தாவது திருப்பாடல்

சென்ற திருப்பாட்டில் இறைவன் புகழ் பேசப்பெற்று, அவ் இறைவனுடைய திருவடிகளைச் சென்று சேருவதற்கு இறைவியின் அழகொளிரும் திருப்பாதங்களைப் பாடிப்பரவு வதே பயன்பெறும் வழி எனப் பகரப்பட்டது. இத்திருப் பாடலில் தலைவன் தாளினையே தலைப்பட்டுவிட்ட கன்னியருள் ஒருத்தியின் சொல்லும் சொயலும் எவ்வாறு தோற்றமளித்தன என்பதனை மணிவாசகப் பெருந்தகையாரி மனமுருகிப் புலப்படுத்துகின்யார்.

வார் உருவப் பூண்முலையீர்’ என்பது விளி. மார்புக் கச்சினை உடைய அழகிய அணிகலன்கள் அணிந்த நகில் களை உடைய பெண்களே! என்பது இந்த விளியின் வெளிப் படையான பொருளாகும். “வார் உருவ’ என்ற தொடரால் இக்கன்னிப் பெண் மணக்கும் பருவத்தினைப் பெற்றிருக் கிறாள் என்பது பெறப்படும். பூண் முலையீர் என்ற சொல் அன்னையின் அருளை-பாலுக்கு அழும் குழவிக்குத் தாயாகத் தலையளி செய்து, பாலுாட்டிப் புரக்கும் பான்மையினைப் புலப்படுத்தி நிற்கின்றது.

தம் தோழியரோடு உரையாடலினை மேற்கொள்ளும் ஒவ்வொரு சமயத்திலும் தமது தலைவனுடைய புகழினைப் பன்முறை சொல்லிச் சொல்லி வாயாடிக்கொண்டே யிருப்பாள். ஒருமுறையோடு நிறுத்தாது பன்னிப் பன்னிப் பல புகழ்மொழிகளைப் புகல் வாள். இவ்வுலகில் வாழும் உயிரினங்கள். துன்பப்படுவதற்கெல்லாம் அகந்தையே என்று குறிப்பிட்டுவிட்டு, இறைவன் தம்மையும் தம்மோடு இயைந்த ஏனைய பொருள்களையும் உடையவனாகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/60&oldid=592334" இலிருந்து மீள்விக்கப்பட்டது