பக்கம்:பாவைப் பாட்டு.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 பாவைப் பாட்டு

திகழ்கின்றான் என்றும் அனுபவப் பாடத்தால் இறைவனே தமக்குக் கதியாவான் என்ற உண்மையினைத் தெரிந்து கொண்டிருப்பதாகவும், அதனால் “ ஒரொருகால் எம்பெருமான் என்றென்றே என்று வழுத்தியதாகவும் குறிப்பிடுகின்றார்.

1ஞாலம் மின்புகழே மிகவேண்டும் தென்

ஆலவாயில் உறையும் எம் ஆதியே’

என்று திருஞானசம்பந்தப் பெருமான் தம்முடயை தேவாரத் திருப்பதிகத்தில் சிறப்புறப் புகன்றுள்ளார். உலகில் தோற்றம் கொண்ட உயிர்கள் அனைத்தும் தடையேதுமின்றி இடையறாது சிவபெருமானது திருப்புகழையே ஒதவேண்டு மென்பது இதனால் புலப்படுகின்றது. இறைவனைத் தலைவன் என்று நினைவுபடுத்திக்கொண்ட பாங்காலும், அப்புகழ்சேர்ந்த புண்ணியனின் திருக்கல்யாண குணங்களை வாய் ஒயாது அரற்றிய காரணத்தாலும், அக் கன்னியின் மனம் களிகூர்ந்தது. இதனாலே சித்தம் களிகூர’ என்றார். தன்னைச் சிவனிடத்தே முற்றிலுமாக அடைக்கலப்படுத்தி விட்டாள். ஆதலின் மற்றத் தேவரை மதியாத நிலைக்குத் தான் சென்று சேர்ந்தாள் என்பதனை “விண்ணோரைத் தான் பணியாள்” என்ற தொடர் எடுத்துக்காட்டுகின்றது. அடைக்கலம் என்று வந்தவரை ,உன்வரவு அறிவேன் நீ அஞ்சாதே” என்று அருட்சொற்கள் கூறி அடிமைத் திறம் கொள்ளும் அவ் ஆண்டவனின் திருவடிகல்ள வழுத்தும் நிலையில் வாய் ஒயாது ஈடுபடவேண்டுமென்ற உள்ளக் கிடக்கை இதனால் புலப்படுத்தப்படுகின்றது. பித்துப் பிடித்த நிலையில் நம்ம்ைச் சிவனன்றி வேறொருவர் ஆட்கொண்டு அருளமுடியாது என்று அவன் கருணையினைப் பாடிப் பரவசமுறுகிறாள் கன்னியருள் ஒருத்தி. இந்தப் பாடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/61&oldid=592335" இலிருந்து மீள்விக்கப்பட்டது