பக்கம்:பாவைப் பாட்டு.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 61

‘முன்னம் அவனுடைய காமம் கேட்டாள்

மூர்த்தி அவனிருக்கும் வண்ணம்கேட்டாள்

பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்

பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்

தன்னை மறந்தாள் தன்காமங் கெட்டாள்

தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே

எனும் திருநாவுக்கரசர்தம் திருத்தாண்டகத் திருப்பாடலை நினைவுறுத்துவதோடு,

‘சிந்தனை கின்தனக்காக்கி காயினேன்.தன்

கண்ணினை கின்திருப்பாதப் போதுக்காக்கி வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குடன் மணிவார்த்தைக் காக்கி ஐம்புலன்கள் ஆர வந்தனையாட் கொண்டுள்ளே புகுந்த விச்சை மாலமுதப் பெருங்கடலே மலையே உன்னைத் தந்தனை செந்தாமரைக் காடனைய மேனித் தனிச்சுடரே இரண்டுமிலித் தனியனேற்கே”

எனும் மணிவாசகப் பெருந்தகையாரின் திருவாசகத் திருச்சதகப் பாடலையும் நினைவூட்டுகின்றது.

எனவே, அரசனாக, தன்னை அடைக்கலம் என்று வந்தவர்களை ஆட்செய்யும் பெருமானாக, தம் புகழ்பாடிப் பித்தேறியவர்களை வாழ்விக்கும் பெருமானாக, ஞான வடிவினனாக எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிறைந் திருக்கின்ற பரம்பொருளாகச் சிவன் விளங்குவதும், அவனுடைய திருவடிகளை வாய்ாரப் பாடி அழகாக விளக்கு வதும் மணம் கொண்டு கமழுவதுமாகத் துலங்கும் தாமரைத் தடாகத்தின் இனிய குளிர்ந்த நிரில் குளித்துத் திளைத்து, தாவித்தாவி நீராடுவோமாக என்று கன்னிப் பெண் ஒருத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/62&oldid=592336" இலிருந்து மீள்விக்கப்பட்டது