பக்கம்:பாவைப் பாட்டு.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பாவைப் பாட்டு

தொடக்கத்தில் துலங்கிய அம்மேகம், கடலைச் சென்ற டைந்து நீரை முகந்து கொண்டு வானிடை வலமாக எழுந்த பொழுது, கருநிறம் பெற்று மழைமேகம் ஆன நிலையினைக் குறிப்பிடுவார் போன்று, “முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள் என்னத் திகழ்ந்தது என்றார். உமாதேவியாரின் திருமேனி கருநிறத்ததாயின் கடலில் நீர் முகந்த மேகம் வானிடை எழுந்துபோது கருநிறம் பெற்று மழைமேகம் ஆயினமையை உவமை கூறினார். திருவிளையாடற்

புராணத்திலும்,

தெய்வங்ாயகன் நீறணி மேனிபோற் சென்று பெளவம் ஏய்ந்து உமை மேனிபோற் பசந்து பல்லுயிர்க்கும் எவ்வ மாற்றுவான் கரந்திடும் இன்னருளென கெளவை நீர் சுரங்தெழுந்தன கனைகுரன் மேகம்

(திருநாட்டுப் படலம் : 2)

என்று குறிப்பிடுவதும் ஒப்பு நோக்கற்குரியது. மேலே வான வீதியில் எழுந்த மேகம் மின்னலை உமிழ்ந்தது “எம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்து’ என்றார்கள். சிற்றிடை மின்னலின் கீற்றுக்கு உவமிக்கப் படுதல் மரபு. மின்னல் மின்னிய பிறகு இடி இடித்தல் வழக்காதலின், எம்பிராட்டி திருவடிமேற் ‘பொன்னஞ் சிலம்பிற் சிலம்பி’ என்றார்கள். உமாதேவியார் கால்களில் அணியும் பொற்- சிலமபுகள் ஒலிப்பன போல இடிஇடித்தது என்றனர். இவ்வாறு மழைக்குரிய அறிகுறிகள் வானிடைத் தோன்றும்பொழுது, வானவில் தோன்றுவதுண்டு. அதுவும் தோன்றியது என்று குறிப்பிடும் போக்கில் திருப்புருவம் என்னச் சிலை குலவி என்றார். உமாதேவியாரின் திருப் புருவங்கள் போலும் வானவில் வானிற் றோன்றியது என்பது குறிப்பு. பின்னர் மழை பொழிவ்தனைச் சிவனாரும் உமாதேவியாரும் தம்மை வந்தித்து வாரம் காட்டி வழிபடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/65&oldid=592340" இலிருந்து மீள்விக்கப்பட்டது