பக்கம்:பாவைப் பாட்டு.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பாவைப் பாட்டு

என்ற காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதிப் பாடல் (9) இக்கருத்தை உணர்த்தும். மழை வேட்டலைக் குறிக்கும் ஆண்டாள் திருப்பாவைத் திருப்பாட்டொன்றும் சண்டுக் கருதத்தக்கதாகும்.

ஆழி மழைக்கண்ணா ஒன்று கைகரவேல் ஆழியுட் புக்குமுகந்து கொடு ஆர்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப் பாழியங் தோளுடை பற்பநாபன் கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் கின்றதிர்ந்து தாழாதே சாரங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகிற் பெய்திடாய் காங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் (4)

திருவெம்பாவைப் பாடலைக் காண்போம்.

முன்னிக் கடலைச்

சுருக்கி எழுங்துடையான் என்னத் திகழ்ந்தெம்மை

ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம்

பிராட்டி திருவடிமேற் பொன்னஞ் சிலம்பிற்

சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி

கம்.தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா

எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவன்கமக்கு

முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய்

மழையேலோர் எம்பாவாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/67&oldid=592343" இலிருந்து மீள்விக்கப்பட்டது