பக்கம்:பாவைப் பாட்டு.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினேழாவது திருப்பாடல்

இறைவி இறைவர்களது திருவருள் போன்று மழை பொழியுமாறு கன்னியர்கள் வேண்டினர். திருப்பாட்டில் இறைவி உயிர்களின் குற்றங்களை நீக்குதலும், இறைவன் அவைகள் ஈடேற்றம் பெற அருளும் திறமும் உணர்த்தப் படுகின்றன எனலாம். மழையை வேண்டிநின்ற கன்னியர், தங்கள் பெண் குலத்திற்குத் தனி நாயகியாகத் திகழும் உமாதேவியைக் கருத்திற் கொள்வாராய் “கொங்குண் கருங் குழலி’ எனத் தொடங்கினர்.

‘மணம் மண்டிக்கிடக்கும் கரு நிறம் வாய்ந்த கூந்தலை யுடைய உமையம்மையே! சிவந்த கண்ணையுடைய திருமாலி னிடத்தும், நான்கு திருமுகங்களையுடைய படைப்புக் கடவுளாம் பிரமணிடத்தும், இந்திரன் முதலான தேவர்க ளிடத்தும், இன்னும் பிறிதாகவுள்ள அண்டங்களிலுள்ள உயிர்களிடத்தும், இல்லாததாகிய ஒப்பற்ற பேரின்பத்தை நம்மிடத்தில் கொண்டு கூட்ட, நம்மைக் குற்றங்களினின்றும் நீக்குதலும், இவ்வுலகில் நம் வீடுகளாகிய நெஞ்சங்கள் தோறும் எழுந்தருளி, தன் சிவந்த தாமரை மலரையொத்த அழகிய திருவடியைக் கொடுத்து நிலவுமாறு அருளுகின்ற வீரனாயும், அருள் பார்வை முற்றிலும் கொண்ட அரசனா யும், அவன் வழிவழி அடிமைகளாகிய எங்களுக்குத் தெவிட் டாத அமுதமாயும், நம் தலைவனாயுமுள்ள இறைவனை நன்மை பயக்குமாறு பாடி, தாமரை மலர்கள் நிறைந்து தோன்றும் தெளிந்த நீரையுடைய பொய்கையில் தாவித் திளைத்து நீராடுவோமாக என்று கன்னியர்கள் கூறினர்.

இறைவன் அருளுகின்ற இன்பம் வேறு எவராலும் தர வொண்ணாத இன்பம் என்று குறிப்பிடும் நிலையில் எங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/68&oldid=592344" இலிருந்து மீள்விக்கப்பட்டது