பக்கம்:பாவைப் பாட்டு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பாவைப் பாட்டு

இலாததோர் இன்பம்’ என்றனர். “செங்கண் அவன் செங்கணவன் என்று நின்றது. சிவந்த கண்களையுடையவன் திருமால் ஆவன். கம்பநாடரும் இராமனைக் குறிக்குமிடத்து “செங்கணும் கரிய கோல மேனியாகி எங்கணும் தோன்று கின்றார் எனைவரோ இராமன் என்பார்’ என்று குறிப் பிடுவர். கண் அவன் கணவன் எனக் குறுகி நின்றது. செந் தாமரைக் கண்ணுடையவன் திருமாலாதலின்'செங்கணவன்” என்றார். நான்கு திசைகளிலும் பார்க்கும் நான்குமுகங் களைக் கொண்டவனாதலின் பிரமன் திசைமுகன் எனப் பட்டான். இந்திரன் முதலானவர்களைக் குறிக்கத் தேவர்கள் என்றனர். ‘எங்கும்’ என்ற சொல் தேவருலகம் தவிர்த்துப் பிற உலகங்களையும் குறித்து நின்றது. இயலாத தோர் இன்பம் ஒப்பற்ற இன்பமாம் பரமன் அளிக்கும் பேரின் பத்தைச் சுட்டியதாகும்.

எங்கும் கிடைக்காத பேரின்பம் நமக்குக் கிடைக்க வேண்டுமென்றால் முதலில் நம் மனமாககள் நீங்குதல் வேண்டும். மனமாசுகள் நீங்கிய உள்ளத்தைத் தான் இறைவன் குடிகொண்டு எழுந்தருளும் கோயிலாகக் கொள் வான், இறைவன் நம்மீது கொண்ட கருணையினால் தான் இவ்வாறு எழுந்தருளுகின்றான் என்பதனை மாணிக்க வாசகரே,

பத்தர் சூழ்ப் பராபரன் பாரில்வந்து பார்ப்பவன் எனச் சித்தர் சூழ்ச் சிவபிரான் தில்லை மூதூர் நடஞ்செய்வான் எத்தனாகி வந்து இல்புகுந்து எமை ஆளுங் கொண்டு எம்பணி கொள்வான் வைத்த மாமலர்ச் சேவடிக்கண் கம்சென்னி மன்னி மலருமே (சென்னிப்பத்து:4) என்பதனால் விளங்கும். ‘கும்பிடுவான் யாரென்று தேடுகின் றான் கோவிந்தன்’ என்பது திவ்வியப் பிரபந்தத் தொடர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/69&oldid=592345" இலிருந்து மீள்விக்கப்பட்டது