பக்கம்:பாவைப் பாட்டு.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.பா. 69

எவ்வளவுதான் முயன்றாலும் எளிதில் அவன் திருவருளைப் பெற்று உய்யுமாறில்லை. அவனருளைப் பெறு வதற்கும் அவனருள் வேண்டும். அவன் அடியினைப் பரவு வதற்கும் அவனருள் வேண்டும். இதனையே அவனருளாலே அவன்தாள் வணங்கி என்பர் மணிவாசகர் சிவபுராணத்தில். நம் மனத்தே அவன் தன் ஒப்பற்ற திருவடிகளைப் பொருந்தச் செய்தல் என்பது அருமையுடைய செயலாதலின், அத்னை வெற்றிகரமாகச் செய்து முடித்த சிவனைச் சேவகன்” என்றார். சேவகன் என்ற சொல் சிறந்த வீரன் என்னும் பொருளைத் தருவதாகும்.

ஆவகை காமும் வந்து அன்பர் தம்மோடு

ஆட்செய்யும் வண்ணங்கள் பாடிவிண்மேல் தேவர் கனாவிலும் கண்டறியாச்

செம்மலர் பாதங்கள் காட்டும் செல்வச் சேவலம் ஏந்திய வெல்கொடியான்

சிவபெருமான் புரம்செற்ற கொற்றச் சேவகன் காமங்கள் பாடிப் பாடிச்

செம்பொற்செய் சுண்ணம் இடித்து காமே

(திருப்பொற்கண்ணம் : 1.6)

என்னும் மணிவாசகரது திருப்பொற்சுண்ணப்பாட்டு, “சேவகன்” எனச் சிவனாரைச் சித்திரிப்பது காண்க. தாமா கவே வந்து திருவடி அருளுகின்ற கருணையைப் போற்ற வார் அங்கண் அரசை என்றனர். அரசன் தன் மக்களைக் காப்பதுபோல சண்டு அரசனாகிய சிவன் அனைத்து அண்டம் களிலுமுள்ள உயிர்களையும் காக்கும் தலைவனாக உள்ளமை யால் அங்கண் அரசு என்றனர். அடுத்துக் காத்தலோடன்றி அடியவர்களுக்கு அமுதமாய் நின்று பேரின்பம் நுகருமாறு செய்தலின் அடியோங்கட்கு ஆரமுதே’ என்றனர். நமக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/70&oldid=592348" இலிருந்து மீள்விக்கப்பட்டது