பக்கம்:பாவைப் பாட்டு.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பாவைப் பாட்டு

நன்னலம் நல்குகின்ற இறைவனைப் பாடுதலே கடன் எனக் கருதுவார் நலந்திகழப் பாடி’ என்றனர். இறைவன் திருவடி களை உள்ளக்கிழியில் உருவெழுதி வைக்க வேண்டும் என்று அப்பர் பெருமானும் சுட்டியமை ஈண்டுக் கருதத்தக்கது.

வெம்மை நமன்றமர் மிக்கு விரவி விழுப்பதன்முன் இம்மை யுன்றாள் என்றன் கெஞ்சத்து எழுதி

வையிங்கிதழில் அம்மையடியேற் கருளுதி என்பதிங்கு ஆரறிவார் செம்மைதரு சத்திமுற்றத்துறையுஞ் சிவக் கொழுந்தே.

(திருச்சத்திமுற்றம் : 6)

கன்னியர்கள் இவ்வாறு சிவன் கழல் போற்றித் தெள்ளிய நீரில் நீராடி மகிழ்ந்தனர்.

செங்க ணவன்பால்

திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இல்லாததோர்

இன்பம் நம் பாலதாகி கொங்குண் கருங்குழலி

ாங் தம்மைக் கோதாட்டி இங்குகம் இல்லங்கள்

தோறும் எமுந்தருளிச் செங்கமலப் பொற்பாதம்

தந்தருளும் சேவகனை அங்கண் அரசை

அடியோங்கட் காரமுதை ாங்கள் பெருமானைப் பாடி கலந்திகழப் பங்கயப் பூம்புனல் பாய்ந்(து)

ஆடேலோர் எம்பாவாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/71&oldid=592349" இலிருந்து மீள்விக்கப்பட்டது