பக்கம்:பாவைப் பாட்டு.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினெட்டாவது திருப்பாடல்

திருவண்ணாமலைத் திருக்கோயில் தனிச்சிறப்பு வாய்ந்த தாகும். நினைக்க முத்தி தரும் அண்ணாமலை என்பர். “ஞானத் தபோதனரை வாவென்று அழைக்கும் மலை அண்ணாமலை என்று அருணகிரிநாதர் கூறுவார். ‘உண்ணாமுலை உமையாளொடு உடனாகிய ஒருவன் அண்ணாமலையான்” என்பர் ஞானசம்பந்தப் பெருமான்.

உயிர்களின் பாசங்களைக் கட்டறுத்து, இறைவன் அருளு கின்ற எளிவந்த தன்மையினை இதுகாறும் சொல்லிவந்த மணிவாசகப் பெருத்தகையார், இத்திருப்பாட்டில் இறைவனது அத்துவித நிலையைக் கன்னியர்கள் வாய்வழிப் புலப்படுத்தி நிற்கிறார். கன்னியர்கள் தங்களுள் ஒருத்தி யைப் பெண்ணே என விளித்துப் பேசத் தொடங்குகின்றனர்.

“பெண்ணே திருவண்ணாமலையில் திருக்கோயில் கொண்டுள்ள அண்ணாமலையானதுதிருவடித் தாமரை மலர் களைச் சார்ந்து வணங்கும் தேவர்களது முடியின் கண் விளங்கும் பலவகைப்பட்ட இரத்தினங்களும் பொலிவிழந்து ஒளி மழுங்கியது போலவும், எங்கும் பரவி நிற்கும் இருள் நீங்க, உலகெங்கும் காலையில் கதிரவன் ஒளி தோன்றலும். குளிர்ச்சி பொருந்திய ஒளி நீங்கி விண்மீன்கள் மறைந்து நிற்கின்ற தன்மை போலவும், பெண்ணாகியும் ஆணாகியும் அலியாகியும், ஒளியை உமிழும் இரு சுடர்களாம், சூரியன் சந்திரன் இவைகளைப் பொருந்திய ஆகாயமாகவும், நிலமாகியும், இவைகளுக்கெல்லாம் வேறாகியும் ஞானத் தால் உணர்வார்க்கு அமுதமயமாகியும் கலந்து என்றும் எங்கும் நீக்கமற விளங்குபவனாகிய சிவபெருமானது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/72&oldid=592351" இலிருந்து மீள்விக்கப்பட்டது