பக்கம்:பாவைப் பாட்டு.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பாவைப் பாட்டு

திருவடிகளைப் பாடி இந்த அழகு நிறைந்த நீரினில் தாவிக் குதித்து நீராடுவோமாக’ என்று பேசினர்.

இறைவனும் உயிரும் ஒன்றிட்டு அத்துவிதமாய் நின்ற போது இருவரது நிலையும் இரண்டு உவமைகள் வழி ஈண்டு விளக்கப்படுகின்றன. அண்ணாமலையான் திருவடிகளைச் சென்று தொடும் விண்ணோர் தம் முடியின் மணியொளி வீறு அற்றாற் போலவும், கதிரவன் ஒளி வானிடைப் பரவலும் ஒளி மழுங்கிய தாரகைக் கூட்டத்தின் தன்மை போலவும் என உவமைகள் இரண்டு எடுத்துக்காட்டப் பட்டுள்ளது. இறைவனது திருமுடியை அன்னப்பறவை உருத்தாங்கித் தேடினான் பிரமன், அடியைத் தேடப் பன்றியுரு தாங்கிச் சென்றார் திருமால். அப்போது சிவன் இவர்கள் இருவரும் காணவொண்ணா நிலையில் அழற்பிழம் பாகக் காட்சி தந்தான். எனவே அண்ணலின் அடித்தாமரை மலர்கள் பேரொளிப் பிழம்பாகத் திகழும் தன்மையுடைத் தாகும். திருநாவுக்கரசர் பெருமானும் தம் திருவிருத்தப் பாட்டில் (17)

சோதியும் செஞ்சுடர் ஞாயிறும் ஒப்பன தூ மதியோடு என்று குறிப்பிடுவர். கண்டராதித்த தேவர் என்னும் சோழர் குலத்துதித்த ஞான வள்ளலும்,

நெடியானோடு கான்முகனும் வானவரும் நெருங்கி முடியான் முடிகள் மோதியுக்க முழுமணியின் திரனை அடியார் அலகினால் திரட்டும் மணி தில்லையம்

பலத்துக்கு அடியார் கொன்றை மாலையானைக் காண்பதும் ஒன்று

கொலோ,

என்று தேவர்கள் தங்கள் மணி மகுடத்துடன் சென்று திருவருள் பெறச் சிவபெருமானைத் தரிசித்த பான்மை யினைத் திருவிசைப்பாவில் விளக்குவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/73&oldid=592352" இலிருந்து மீள்விக்கப்பட்டது