பக்கம்:பாவைப் பாட்டு.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 73

மேற்காட்டப் பெற்ற இரண்டு உவமைகளும் இறைவனும் உயிரும் முத்தி நிலையில் ஒன்றாகாமல் இரண்டாகாமல் ஒன்றும் இரண்டும் ஆகாமல் கலந்து நிற்கும் பெற்றியினை அறிவித்தனவாகும்.

இவ்வாறு அத்துவிதமாய் நின்ற சிவன், அறிவுப் பொருள், அறிவில் பொருள்களோடும் கலப்பினால் பேத மற்றும், பொருட்டன்மையால் பேதமாயும், உயிர்க்குயிராம் தன்மையால் பேதா பேதமாயும் விளங்குகிறான் என்பர். பெண்ணாகி, ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேரி விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் கண்ணார் அமுதமாய் நின்றான் என்றார். பெண்ணாகி ஆனாய் அலியாய் என்பது உயர்திணை அறிவுப் பொருள்களைக் குறித்து நின்றது. ‘பெண் ஆண் அலியெனும் பெற்றியன் காண்க’ என்று திருவாசகத் திருவண்டப் பகுதியாலும் மணிவாசகர் இதனை உணர்த்துவர். அறிவில் பொருள் களைக் குறிக்க விண்ணாகி மண்ணாகி’ என விளம்பினார். ஐம்பூதங்களின் முதலாக உள்ள விண்ணையும் இறுதியாக உள்ள மண்ணையும் குறிப்பிட்ட வகையினால் இடைப்பட்ட நீர், நெருப்பு, காற்று ஆகிய மூன்றினையும் உடன் குறிப்பிட்டவாறாம். ஆகாயம் கதிரவன், மதி, கணக்கிலாத நட்சத்திரங்களை உடைமை காரணம் பற்றிப் ‘பிறங்கொளி சேர் விண்’ எனப்பட்டது.

இரு கிலனாய்த் தீயாகி ருேமாகி

இயமானனாய் எரியும் காற்றுமாகி

அருகிலைய திங்களாய் ஞாயிறாகி

ஆகாசமாய் அட்டமூர்த்தி யாகிப்

பெருகலமும் குற்றமும் பெண்ணும் ஆணும்

பிறருருவும் தம்முருவும் தாமேயாகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/74&oldid=592353" இலிருந்து மீள்விக்கப்பட்டது