பக்கம்:பாவைப் பாட்டு.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தொன்பதாவது திருப்பாடல்

இறைவனது அத்துவித நிலையை அறிவுறுத்திய மணிவாசகப் பெருந்தகையார்’ உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்’ என்ற இச்சிறந்த திருப்பாட்டில், உலக உயிர்கள் தம்மையெல்லாம் சிவபெருமானிடத்து அடைக்கலப் பொருளாக ஒப்புவித்த பின்னர் அவைகட்கு யாதொரு செயலுமின்றி, சிவன்மாட்டு வரு பயன்களை விரும்புதலும் தகுதிப்பாட்டிற்குக் குறைவானதென்று உணர்த்தத் தொடங் கும் வகையில் கருத்துகளைப் பெய்துள்ளார்.

இறைவனின் அத்துவித நிலையைப் புகழ்ந்து பாடிய கன்னியர்கள், ஏற்கெனவே உயிர்கள் அனைத்தும் சிவன் மாட்டு அடைக்கலம் புகுந்துள்ள செயலினை நினைவூட்டு வாராய் ‘எங்கள் பெருமான்’ என்று ஆண்டவனைத் தம் மோடு அகப்படுத்திக் கூறினர்.

“'உங்கையிற் பிள்ளை உமக்கே அடைக்கலம்’ என்பது ஒரு பழமொழி. ஒருவரிடத்து ஒரு மகனைக் கையடையாக -அடைக்கலமாக ஒப்புவித்தபோது அவனைக் காக்கவேண்டிய கடப்பாடு அப்பெரியவருடையது என்பதனை உணர்த்தி நிற்பது அப்பழமொழி. தமக்கு அன்புபட்டவர், பாரமும் பூண்பர்’ என்பது அப்பர்தம் திருவாருர் அறநெறித் தேவாரம் (2).

அந்நாளில் சின்னஞ்சிறியரை ஆசிரியர்பால் கல்விப் பயிற்சிக்காக இவ்வாறு சொல்லி ஒப்படைத்தல் வழக்கம் என்பது தெரிய வருகிறது. அடைக்கலம் என்று ஒருவரி கேட்டு, அதனை ஏற்றுக்கொண்டபின் அவரைக் காத்தல் என்பது கடமையாகி விடுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/77&oldid=592357" இலிருந்து மீள்விக்கப்பட்டது