பக்கம்:பாவைப் பாட்டு.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$. Lurr. 77

புதுக்குதல் என்பது நல்ல சொல். மீண்டும் சொல்லுதல் நினைவூட்டுதல் எனப் பொருள்படும். அடைக்கலம் தந்த வர்க்கு அவர்தம் கடமையை அறிவுறுத்தி, அது கேட்டு அவர் உள்ளம் சினத்தலும், பொறாது சலித்தலும், என் செய்வ தென்று கலங்கலும் கூடும். ஆயினும் தடங்கருணைப் பெருங் கடலாகத் திகழும் சிவனே உலக உயிர்களை அடைக்கலமாக ஏற்று இருப்பதனால் மென்மையாக அவனுக்கு எடுத் துரைக்கும் போக்கில் உனக்கொன்று உரைப்போம், கேள்” என்கின்றனர் கன்னியர்கள்.

“உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று அங்கு அப்பழஞ்சொல் புதுக்கும் அம் அச்சத்தால் என்பது விநயமாக உரையாடும் கன்னியர் தம் பேச்சுத் திறத்தினை உணர்த்தி நின்றது.

“பொன்னார் திருவடிக்கு ஒன்றுண்டு விண்ணப்பம்” என்பாr அப்பரடிகளும் (திருத்துங்கானை lom L-the திருவிருத்தம் : 1).

சிவபெருமானை மனமொழி மெய்களால் போற்றுவதே தம் கடன் என நினைப்பார்போல அதனை உடன்பாட்டான் அன்றி எதிர்மறை முகத்தான் உணர்த்துவார் போல,

எங்கொங்கை கின் அன்பர் அல்லார் தோள் சோற்க எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க கங்குல் புகல் எங்கண் மற்றொன்றும் காண ற்க என்றனர்.

“எங்களது நகில்கள் உன்னுடைய அன்பர்கள் அல்லா தாாது தோள்களிலும் பொருந்தாதொழிவதாகுக. எமது கைகள் உனக்கன்றி வேறொருவருக்கும் எத்தகைய தொண்டு களையும் செய்யாமலொழிவனாகும். எமது கண்கள் இரவிலும் பகலிலும் உன்னையன்றி வேறொரு பொருளை யும் காணா தொழிவதாகுக’ என்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/78&oldid=592358" இலிருந்து மீள்விக்கப்பட்டது