பக்கம்:பாவைப் பாட்டு.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பாவைப் பாட்டு

இறைவன் அடைக்கலமாகக் கொண்ட பிறகு நிகழும் செயல்கள் அனைத்தும் இறைவன் இச்சைப்படி நிகழும் செயல்களாதலின் கன்னியர் இவ்வாறு கருதினர்.

அன்றே என்றன் ஆவியும் உடலும்

உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னை ஆட்கொண்ட

போதே கொண்டிலையோ இன்றோர் இடையூறு எனக்குண்டா எண்தோள் முக்கண் எம்மானே கன்றே செவ்வாய் பிழைசெய்வாய்

நானோ இதற்கு நாயகமே (குழைத்த பத்து :7) சிவனடியார்களே தங்கள் கணவராக வாய்க்க வேண்டும் என்பதும் சிவனடிக்கே தொண்டு செய்யும் எங்கள் கைகள் என்பதும், இரவு பகல் எந்நேமும் சிவனடியன்றிப் பிறி தொன்றை எங்கள் கண்கள் காணா என்பதும் கன்னியர் கொண்ட உறுதியாகும்.

கனவிலும் கனவினும் நம்பா வுன்னை மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்

(திருவாவடுதுறை 3) என்பர் திரு ஞானசம்பந்தரும்.

இவ்விண்ணப்பங்களை முறையே நீ ஏற்றுக் கொண்டால் சூரியன் எந்தத் திசையில் உதித்தாலும் கவலை இல்லை எங்களுக்கு என்றார்கள். எங்கெழிலென் ஞாயிறு எமக்கு” “எங்கெழிலென் ஞாயிறென விண்ணையும் வளர்ந்தோம்’ என்பது சிந்தாமணி (1793).

சிவத் தொண்டர்கள் தங்கள் கரணங்கள் அனைத்தும் சிவன் திருப்பணிக்கே உரியன எனக் கருதினர்.

இத்திருப்பாட்டு. இறைவனுக்கு மனம், மொழி, மெய் ஆகிய முக்கரணங்களானும் பணி செய்யும் பாங்கினை உணர்த்தி நிற்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/79&oldid=592360" இலிருந்து மீள்விக்கப்பட்டது