பக்கம்:பாவைப் பாட்டு.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி. பா.

ஒருவேளை, இவளுடைய செவிகளில் ஏதேனும் குறைபாடு உண்டோ? அது வன்செவி ஆயிற்றோ? இல்லையெனில் தேவர்கோன் அறியாத தேவதேவன் குறித்து எழுந்த வாழ்த் தொலிகளைக் கேட்டு, இவள் விம்மி விம்மி அழுகின்றாளோ? அம்மொழி இவளை மேலே செயலேதுமின்றி நெஞ்சை உருக் கிற்றுப் போலும்! “மாதேவன் வாழ்த்திய வாழ்த்தொலி போய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து போதாரமளியின் மேல் நின்றும் புரண்டும் இங்கண் ஏதேனும் ஆகாமல் கிடந்தாள்’ என்று உரைக்கின்றனர்.

“சிந்தனை நின்தனக்காக்கி நாயினேன்.தன் கண்ணினை நின் திருப்பாதப் போதிற்காக்கி வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி, வாக்கு உன்மணி வார்த்தைக்காக்கி, ஐம்புலன்கள் ஆரச் சிவபெருமானை, இறை அனுபவ முழுநெறியில் நின்று வழிபட்டவர் மணிவாசகச் செம்மல். இந்த அனுபவமே மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்துக் கண்ணிர் ததும்பவும் வெதும்பவும் அவரை ஆட்கொண்டது. அதுவே இப்பாட்டில் வாழ்த்தொலி கேட்பதும் விம்மி விம்மி மெய்ம்மறந்து ஏதேனும் ஆகாமல் கிடந்தாள் எனப் பேசத் துாண்டிற்று.

இப்பாடலில் தான் பெற்ற பெரும்பயனைத் தன் தோழி யும் பெறவேண்டும் என்ற உயர்ந்த உள்ளத்தில், “சேரவாரும், செகத்திரே’ என்று தாயுமானவர் கூறியாங்கு மகளிர் அழைக்கின்றனர். உள்ளந் தாள் இருந்து உச்சியளவு நெஞ்சாய் உருகுகின்ற மனநிலையை இப்பாடல் அருமை யாய் எடுத்துரைக்கின்றது.

ஆதியும் அந்தமும்

இல்லா அரும்பெருஞ்

சோதியை யாம்பாடக்

கேட்டேயும் வாள்தடங்கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/8&oldid=592361" இலிருந்து மீள்விக்கப்பட்டது