பக்கம்:பாவைப் பாட்டு.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாவது திருப்பாடல்

‘உங்கையற் பிள்ளை உனக்கே அடைக்கலம்’ என்ற மேலைத் திருப்பாட்டில் கன்னியர்கள், தங்கள் மனம், மொழி, மெய் என்னும் முக்கரணங்களும் ஊழி முதல்வனாம் சிவனின் திருப்பணிக்கே ஆகுமாறு விண்ணப்பித்த முறைமையை அறிவுறுத்திய மணிவாசகப் பெருமான் இத்திருப்பாட்டில், கன்னியர்கள் நீராடி முடித்துக் கொண்டு, சிவபெருமான் தம்மைக் காத்தருள வேண்டும் எனப் போற்றி நின்றதனை உணர்த்துகின்றார்.

“எங்களைப் பாதுகாத்து உன்னுடைய எப்பொருட்கும் முன்னே விளங்கிய திருவடி மலர்களை அருளுவாயாக” என முதல் வேண்டுகோளினை விடுக்கின்றனர். இறைவன் திருவடிகளை வழுத்துவதே (ԱԲ 50 ՈD. அவனுடைய திருவருளுக்கு உருவாயமைந்தது திருவடி நிலையேயாகும். திருவள்ளுவரும் தம் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஏழு பாடல்களில் இறைவன் திருவடிகளையே கூறினார். இறைவன் திருவடிகளைப் பரவுவதே உலக உயிர்களின் கடமையாகின்றது. பிறவியின் பெரும்பயன் இறைவன் அடிசேர்தலே என்பது பெரியோர் கண்ட துணிபாகும். முதலாக இருக்கும் இறைவனே முடிவாகவும் இருக்கிறான் என்பதனை உணர்த்த போற்றியருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்’ என்றார். திருநாவுக்கரசர் பெருமானும் ‘ஆதியும் அந்தமும் ஆவன ஐயாறன் அடித்தலமே’ (திருவையாறு 17) என்பர். ‘திருவடிக்கு முதன்மை கூறுங்கால் மலரெனவும், ஈறு கூறுங்கால் செந்தளிர் களெனவுங்கூறியது ‘ஒடுங்கி யுளதாம்’ (சிவஞானபோதம்சூத்திரம் 1) என்னும் சைவ வுண்மைப் புலப்படற்கென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/81&oldid=592364" இலிருந்து மீள்விக்கப்பட்டது