பக்கம்:பாவைப் பாட்டு.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.பா. 81

“தளிரி னின்றே மலர் தோன்றும் உண்மை கருதத்தக்கது’ என்பது கதிர்மணி விளக்கம். இவ் ஆதியினுக்கும் அந்தத் திற்கும் இடைப்பட்டனவாக இறைவனது ஐந்தொழில் களைக் குறிப்பர்.

போற்றி எல்லா வுயிர் க்கும் தோற்றமாம் பொற் பாதம்’ என்பதனால் படைப்பு குறிக்கப்பட்டது. ‘போற்றி எல்லா வுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்’ என்றதனால் அளித்தல் குறிக்கப்பட்டது. ‘போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்’ என்றதனால் மறைத்தல் தொழில் குறிக்கப்பட்டது. ‘போற்றி யாமுய்ய ஆட்கொண்டருளும் பொன் மலர்கள்’ என்றதனால் அருளல் குறிக்கப்பட்டது. இவ்வாறு ஐந்தொழில்களையும் சிவபெருமானது திருவடி களே செய்தன என்பார் பொற்பாதம், பூங்கழல்கள், இணையடிகள், புண்டரிகம், பொன்மலர்கள் என்றார்.

இறைவன் சத்தியே திருவடிகளாய் விளங்குவதாகக் கூறுவர். இறைவன் ஒருவனே கதிரவனும் ஒளியும் போலச் சிவனும் சத்தியுமாய்த் தாதான்மிய ஒற்றுமையால் இருதிறப் பட்டுப் பொதுமையில் நிற்கும் என்பர் சைவ சித்தாந்திகள், தீ ஒன்றாயினும் அடுதல்தொழிலுக்கு உதவுங்காலையில் அடுஞ்சத்தியாகவும், ஒரு பொருளை எரிக்கும் பொழுது சுடுஞ்சத்தியாகவும் கருதப்படுவதுபோல, சிவசத்தியொன்றே காரிய வேறுபாட்டால் பரை, திரோதானம், இச்சை, ஞானம், கிரியை எனப் பெயரிய சக்திகளாகவும் விளங்கும் என்று கூறுப. சிவப்பிரகாசம் என்னும் சைவ சித்தாந்த சாத்திர நூல் ஐந்தொழிலின் சிறப்பினை,

ஏற்ற இவை அரனருளின் திருவிளையாட்டாக

இயம்புவர்கள் அணுக்களிடர்க்கடல் கின்று மெடுத்தே

ஊற்றமிகு அருள்புரிதல ஏதுவாக

உரைசெய்வர் ஒடுக்கம் இளைப்பொழித்தல் மற்றைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/82&oldid=592369" இலிருந்து மீள்விக்கப்பட்டது