பக்கம்:பாவைப் பாட்டு.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பாவைப் பாட்டு

தோற்ற மலபாகம் வரக்காத்தல் போகம்

துய்ப்பித்தல் திரோதாயி கிறுத்தலாகும் போற்றலரும் அருளேயன்றி மாற்றுப்

புகன்றவையும் அருளொழியப் புகலொணாதே ( 18) என்று குறிப்பிடும்.

எல்லாவுயிர்களுக்கும் உண்மையான இன்ப அனுபவமாக இருப்பன திருவடிகளே. உலகியல் இன்பத்திலிருந்து தம்மை விடுவித்து, மாறாத இறையின்பத்தைத் தமக்குத் தந்தருள வேண்டும் என்பதனைக் குறிக்குமுகத்தான் மணிவாசகரே தம் அச்சோப் பதிகத்தில் (3)

பொய்யெலாம்.மெய்யென்று புணர்முலையார் போகத்தே மையலுறக் கடவேனை மாளாதே காத்தருளித் தையலிடங் கொண்டபிரான் தன் கழலே சேரும் வண்ணம் ஐயன் எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே (அச்சோ : 3)

என்று குறிப்பிடுவது கருதத்தக்கது.

திருநாவுக்கரசர் பெருமானும் ஐயாறன் அடித்தலமே என்ற கருத்தமைய,

சிந்திப் பரியன. சிந்திப்பவர்க்குச் சிறந்து செங்தேன் முந்திப் பொழிவன முத்தி கொடுப்பன மொய்த்து இருண்டு பக்தித்துகின்ற பழவினை தீர்ப்பன பாம்பு சுற்றி அந்திப் பிறையணிந்து ஆடும் ஐயாறன் அடித்தலமே

(தேவாரம் : 5041) என்று பாடியிருப்பது எண்ணத்தக்கது.

சுந்தரர் தம் திருப்பாண்டிக்கொடுமுடிப் பதிகத்தில் மற்றுப் பற்றெனக்கின்றி கின் திருப் பாதமே

மனம் பாவித்தேன் பெற்றலும் பிறந்தேன் இனிப்பிறவாத தன்மை

வக்தெய்தினேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/83&oldid=592371" இலிருந்து மீள்விக்கப்பட்டது