பக்கம்:பாவைப் பாட்டு.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 திருப்பள்ளி எழுச்சி

வைகறைப் போதில் துயிலெழுவது அந்நாளைய வழக்க மாதலின், அரசர்கள் தத்தம் அரண்மனைகளில் வைகறையிற் பாடும் பாணர்களை நியமித் திருந்தனர். இவ்வாறு நியமிக்ககப் பெற்ற பாணர்கள் தாம் வாழ்த் திப் பாடவந்த அரசனுடைய வீரத்தினையும் வெற்றிச் சிறப்பினையும் ஏத்திப் பாடுவது மரபாகும். அவ்வாறு அரசனைத் துயிலுணர்த்தும் நேரம் வைகறைப் போதாதலின் புறவுலகில் நிகழும் நிகழ்ச்சி களையுங் கூறிப் பள்ளியெழுச்சி பாடுவாராயினர். அவ்வாறு பாடுங்காலையில் வைகறையில் நிகழும் இயற்கை பற்றிய இனிய சித்திரக் காட்சிகள் உறுதியாக இடம்பெற்றிருக்கக் காணலாம்.

தமிழில் மூன்று திருப்பள்ளி யெழுச்சிகள் சிறப்பானவை என்று கூறுவர். மாணிக்கவாசகர் பாடிய திருப்பள்ளி யெழுச்சி, தொண்டரடிப் பொடியாழ்வார் பாடிய திருப் பள்ளியெழுச்சி, திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பாடிய திருப்பள்ளியெழுச்சி ஆகிய மூன்றே அவை. மணிவாசகப் பெருந்தகையார் பாடியருளிய திருப்பள்ளியெழுச்சி சொற் செட்டும் பொருள் நயமும் கொண்டு கருத்தாழ மிக்கதாய்க் காட்சியளிக்கிறது. திருவாசகத்துள் ஒரு பகுதியாக இயங்கும். இப்பகுதியினை ஆன்றோர்கள் “திருராதான சுத்தி’ என வழங்குவர். திருராதானம் என்றால் மறைப்பு என்றும், கத்தி என்றால் தூய்மை செய்வது என்றும் பொருள் விரியும். சுருங்கச் சொன்னால் ‘மறைப்பின் நீக்கம் ‘ எனச் சொல்வி, விடலாம். உலகத்து உயிர்களுக்கு மறைப்பினைக் காட்டி, வினைப்பயன் நுகருமாறு பக்குவம் செய்து வந்த திருராதான சுத்தி, அருட்சுத்தியாக வெளிப்படும் விரைவு நினைந்து இறைவனைப் பற்றி எழுந்தருள்கவென விரும்பியபடியாகத் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் அமைந்துள்ளன என்பர்.

றேணிந்தார் அகத்திருளும் நிறைகங்குல் புறத்திருளும் மாறவரும் திருப்பள்ளி யெழுச்சினியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/87&oldid=592378" இலிருந்து மீள்விக்கப்பட்டது