பக்கம்:பாவைப் பாட்டு.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

编。 LúIT, 87

என்று பக்திச்சுவை நனிசொட்டப் பாடிய திருநாவுக்கரசு நாயனார் புராணத்தில் திருப்பள்ளியெழுச்சியின் பயனைக்

குறிப்பிடுவர் o

திருவெம்பாவை திருவண்ணாமலையில் பாடப்பட்டது போலத் திருப்பள்ளியெழுச்சி திருப்பெருந்துறையில் பாடப் பட்டதாகும்.

திருப்பள்ளியெழுச்சி போற்றி என் வாழ் முதலாகிய பொருளே எனத் தொடங்கக் காணலாம்.

துயிலில் ஆழ்ந்திருக்கும் அரசனை அவன் பெயரும் விரமும் வெற்றியும் புகழும் கூறி வைகறையில் பாணர்கள் எழுப்புதல் போல, சண்டு மாணிக்கவாசகப் பெருமான் இறைவனது திருப்பெயர்களையும், பெருமைகளையும் சிறப் பாகக் கூறித் தமக்கும் தம் தலைவனாம் இறைவனுக்கும் இடையேயுள்ள தொடர்பின் காரணமாகத் தாம் பெற்ற பயன் கருதி அழைப்பார் போல முதற்கண் என் வாழ் முதலாகிய பொருளே போற்றி’ என்று அழைத்தார். “வாழ் முதல்’ என்ற தொடர் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கதாகும். தம்முடைய வாழ்விற்கே சிவபெருமான் முதலாவதாக -முதலாக (Capital) விளங்குகிறான் என்பதனைத் தொடக் கத்திலேயே குறிப்பிட்டுவிடுகிறார்.

“இதழ்களையுடைய தாமரை மலர்கள் மலருகின்ற சேற்றினையுடைய வயல்களால் குழப்பெற்ற சிருப்பெருந்துறை என்னும் தலத்தில் திருக்கோயில் கொண்டுள்ள சிவபெருமான் என்று புறத்தேயும் அப் பெருமானைக் கண்டு சேற்றிதழ் கமலங்கள் மலரும் தண் ‘கும் திருப்பெருந்துறையுறை சிவபெருமானே’ ‘ார். இது சிந்தனைக்கும் எட்டாத சேண் தூரத்தில் விளங்கும் இறைவன், நினைவார்தம் உள்ளத் தாமரையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/88&oldid=592379" இலிருந்து மீள்விக்கப்பட்டது