பக்கம்:பாவைப் பாட்டு.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 திருப்பள்ளி எழுச்சி

வீற்றிருக்க வருவன்’ என்னும் குறிப்பினை உணர்த்திய வாறாம்.திருபெருந்துறைஎன்னும் திருத்தலம் திருவாதவூரடி கள் புராணம் இயற்றிய கடவுள் மாமுனிவரால்,

வெம்பிறவி வேலைதனில் வீழ்வார்கள் எல்லாம் கம்புசிவ காமமெனும் கற்புணை பிடித்தால் எம்பரன் அருட்கரையில் ஏறுதுறை யாமால் அம்புவி மொழிந்துள பெருந்துறை அதன் பேர்

என்று பாராட்டப்பட்டுள்ளது. உயிர்களை மீட்டு அருட்கரைக்கு ஏற்றுகின்ற துறையாதலின் திருப்பெருந்துறை எனப் பெயர் அமைந்ததாகக் கூறுவர்.

‘ஏறு உயர் கொடி உடையாய்”

என அடுத்து அச்சிவபெருமானைப் புகழ்ந்துரைத்தார். இடப இலச்சினை பொறித்த கொடியை உடையவன் என்பதனால் இறைவனின் உருவம் புலப்படும். ‘திருப்பெருந்துறை சிவபெருமானே’ என்பது அருவுருவ நிலையைக் குறிக்கும். ‘எனையுடையாய்’ என மணிவாசகர் இறைவனைக் குறிப்பிடும் காரணம், இறைவன் உயிர்களைப் பக்குவப் படுத்தித் தன்னடிமைகள் என்று அவை உணருமாறு செய்தலுக்கே என்பர். அடுத்து ‘எம்பெருமானே’ எனச் சுட்டியது தன்னை அடிமை கொண்ட காரணத்தினால் சிவபெருமான் தனக்குத் தலைவன் ஆயினான் என்பது கருதியாகும்.

அடுத்து, பொழுது லிடிந்ததனைப் பணிவாகச் சொல்வார். போற்றி, புலர்ந்தது என்றார், அழகிய திருவடி, களின் மீது இருமலர்களாக விடுமலர்களைத் தூவி, உள்: திருமுகத்தில் நாங்கள் உய்யும்படி நீ அருளுகின்ற அழகிய புன்முறுவலைக் கண்டு நின் திருவடிகளை வணங்கும் முறைமை உடையோம் என்று குறிப்பிட, ‘பூங்கழற்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/89&oldid=592380" இலிருந்து மீள்விக்கப்பட்டது