பக்கம்:பாவைப் பாட்டு.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாவது திருப்பாடல்

இதற்கு முந்தைய திருப்பாட்டில் பொழுது புலர்ந்தது என்று பாடிய மாணிக்கவாசகர், அப்புலர்காலைப் பொழுதில் நிகழ்வனவாகிய காட்சிகளைக் கட்டுரைப்பார் போலத் திருப்பெருந்துறை சிவபெருமானே என்றும், அருள்நிதி தரவரும் ஆனந்தமலையே என்றும், அலைகடலே என்றும் ஆண்டவனை அழைக்கின்றார். தடங்கருணைப் பெருங் கடலாம் சிவபெருமானைக் கடலென்றும் மலையென்றும் விளித்திருப்பது ஒரு காரணம் பற்றியேயாகும். மலை, மழை வளம் வறண்ட வறட்சிக் காலத்தும் வளம் தரும் வள்ளன்மை கொண்டதாதலின் அருள் நிதி தரவரும் ஆனந்த மலையே’ என்றார், மணிவாசகப் பெருமானே சிவபுராணத்தில் (19)

ஆராத இன்பம் அருளும்மலை போற்றி என்றும், கீர்த்தித் திருவகவலில் (123-124),

இருள் கடிந்து அருளிய இன்பவூர்தி அருளிய பெருமை அருள்மலை யாகவும்

என்றும், திருத்தசாங்கத்தில் (5)

நெஞ்சத்து இருளகல வாள்வீசி இன்பமரு முத்தி

அருளுமலை என்பது கா ணாய்ந்து

என்றும் குறிப்பிட்டிருப்பதனால், தன்னை வணங்கும் அடியவர்களுக்கு இறைவன் சேம வைப்பாக விளங்கும் பேரின்ப வடிவான மலை போன்றவன் என்றும்

அறியப்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/91&oldid=592384" இலிருந்து மீள்விக்கப்பட்டது