பக்கம்:பாவைப் பாட்டு.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 91

“கடல்’ என்ற சுட்டு இறைவன் நெகிழ்ச்சியுடன் கூடிய பரமானந்த நிலையிலிருத்தலைக் குறிக்கும். “பரமானந்தப் பழங்கடல் (திருவண்டப் பகுதி:66) என்னும் மணிவாசகர் தொடர் இதனையே குறிக்கும். நுரை, திரையாம் அலை முதலியன கடலினிடத்தே தோன்றிப் பின் அங்கேயே ஒடுங்குவது போல, நிற்பதும் நடப்பதுமாய பொருள்கள் அனைத்தும், இறைவனிடத்தே தோன்றிப் பின் அவன்பாலே ஒடுங்கும் என்னும் உயரிய உண்மையினை முற்றத் துறந்தவர் என்று போற்றப்படும் பெரியாராகிய பட்டினத்தடிகள்,

■■■ 軒 郵 ■ 睡 . உளர்தரும் அரையும் திரையும் கொட்புறு கொட்பும் வரையில் சீகா வாரியும் குரைகடல் பெருத்தும் சிறுத்தும் பிறங்குவ தோன்றி எண்ணில வாகி இருங்கடல் அடங்கும் தன்மை போலச் சராசர மனைத்தும் கின்னிடைத் தோன்றி நின்னிடை அடங்கும்

(கோயில் நான்மணி மாலை : 24)

என்று குறிப்பிடுவர். பிறவி என்னும் தொடரும் பெரு நோயினைத் தீர்க்க மருந்து மலையாகவும், தேவர்கள் சாகாமலிருக்க அமுதக் கடலாகவும் ஆண்டவன் விளங்கிய காரணத்தால் இறைவனை மலையென்றும், கடலென்றும் குறிப்பிட்டனர் என்று கொள்ளலாம்.

இறைவனை இவ்வாறு இனிமையாக அழைத்துவிட்டு, காலைப்பொழுதில் புறத்தே நிகழும் நிகழ்ச்சிகளை அறிவிக்கத் தொடங்குவார் போல, “அருணன் இந்திரன் திசை அணுகினன்’ என்றார். அருணன் கதிரவனது தேர்ப்பாசனாவான் ; இந்திரன் திசை என வழங்கப்படுவது கிழக்குத் திசையாகும். இந்திரன் கிழக்குத் திசையிலும், அக்கினி தென்கிழக்குத் திசையிலும், இயமன் தெற்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/92&oldid=592386" இலிருந்து மீள்விக்கப்பட்டது