பக்கம்:பாவைப் பாட்டு.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 திருப்பள்ளி எழுச்சி

திசையிலும், வருணன் மேற்குத் திசையிலும், வாயு வடமேற்குத் திசையிலும், நிருதி தென் மேற்கிலும், குபேரன் வடக்குத் திசையிலும் ஈசானன் வடகிழக்குத் திசை யிலும் விற்றிருப்பர் எனச் சொல்லுவர். எட்டுத்திக்குப் பாலர்கள் என வழங்கப்படும் இவர்கள் எண் திசைகளிலும் காவலாக அமைவர். கதிரவன் கீழ்த்திசையில் தோன்றிய வுடன் இருள்விலகி ஒளி தோன்றுகின்றது என்பதனை உணர்த்த, இருள்போய் உதயம் அகன்றது’ என்பார். ஒளி வானில் விரிகின்ற செயல்கதிரவன் வானத்தின் மேலே மேலே எழுகின்றதன் காரணம் என்று உரைப்பாராய், ! நின்மலர்த் திருமுகத்தின் கருணையின் சூரியன் எழஎழ’ என்றார். கதிரவன் குணதிசை தோன்றியதும் பொய்கையில் உள்ள தாமரை மலர்கள் மலர்ந்தன என்பார்'அண்ணலங் கண்ணாம் நயனக் கடிமலர்மலர்’ என்று குறிப்பிட்டார். தாமரை மலர் கள் இங்கு இறைவன் திருக்கண்களுக்கு ஒப்பாகின்றன. தாமரை மலர்கள் மலர்ந்த அளவிலேயே அம் மலரினுள் இதுகாறும் தங்கித் தேன் உண்டு திளைத்து மயங்கியிருந்த வண்டுகள் இசைபாடின என்பார். ‘திரள் நிரை அறுபதம் முரல்வன” என்றார். வைகறைப் போதில் வண்டுகள் தேன் வண்டு ரீங்காரம் இடும் இயல்பினவாகும். இவ்வாறு வண்டு பாடும் இனிய காட்சிச் சிறப்பினைக் குமரகுருபரர்,

மழலைவண்டு தடமலர் குடைந்துபுது

மதுவருக்தி நறுமல்லிகைச் சேக்கையின் வடிபசுங் தமிழினிசை பயின்றபெடை

யொடுதுயின்றினிய செவ்வழிப் பாட்டினை வருவிபஞ்சி பயிறரு மதங்கர் தெரு

மரமுரன்று நெடுவைகற்ைப் போய்ச்செழு மலரிலஞ்சி றொறுமுலவு கந்தபுரி

மருவுகந்தனை யெமையனைக் காக்கவே

என்று முத்துக்குமார சுவாமிப் பிள்ளைத் தமிழில் குறிப் பிடுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/93&oldid=592387" இலிருந்து மீள்விக்கப்பட்டது