பக்கம்:பாவைப் பாட்டு.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

Ga, LIпт•

கதிரவன் கிழக்குத் திசையில் உதித்தான்: உதித்த அளவில் வானில் ஒளி பரவியது; வானில் ஒளி பரவிய அளவில் தாமரை மலர்கள் மலர்ந்தன: தாமரை மலர்கள் மலர்ந்த அளவில் வண்டுக் கூட்டங்கள் இசைபாடின என்று ஒன்றன்பின் ஒன்றாக ஒன்றன் செயலோடு ஒன்றன் செயலைத் தொடர்புபடுத்தி மணிவாசகப் பெருந்த கையார் பாடியிருப்பது உளத்திற்குக் கழிபேருவகை நல்கும் செய லாகும்.

இறைவன் என்னும் ஞானச்சுடர் நெருங்கி அன்பர் மனக்கோயிலில் மண்டிக்கிடந்த அகஇருளை அகற்றியது, “தொழும்பர் உளக்கோயிற்கு ஏற்றும் விளக்கே’’ எனக் குமரகுருபரர் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் குறிப்பிட்டுள்ளதனைக் காணலாம். இறைவனின் அருட் கண்கள் ஞானவொளியை உழிழ்ந்த அளவில் ஆன்மாக்களின் அகவிருள் தொலைந்தது. கதிரவன் கிழக்குத் திசையில் தோன்றி, மேல்வானத்தை நோக்கிச் சிறிதுசிறிதாக எழஎழ, எவ்வாறு புறவிருள் நீங்கி, உலகம் ஒளிவெள்ளப் பிழம்பில் ஆழ்கின்றதோ அதைப்போலச் சிவபெருமானின் கண்களி விருந்து ஞானச்சுடர் படிப்படியாக அவனை வணங்கிப் ‘ாடியாடித் தொழும் அடியவர்.பால் படியவும், அகமாசுகள் கிங்சி, ஒளிவெள்ளம் உட்புகுந்தது என்று நயம்பட நவின் வள்ளார் மாணிக்கவாசகர். அறுபதம் முரல்வன - வண்டு *ள் ரிங்காரம் செய்தன என்னும் குறிப்பால் சிவபெருமானின் ‘வர் கூட்டமும் அவன் புகழைப்பாடி இன்பத்தில் கிளைத்தனர் என்னும் கருத்துப் புலப்படுதல் காண்க.

இவ்வாறு குறிப்பிட்டு, சிவபெருமானே! திருப்பெருந் துறையினை வாழும் இடமாகக் கொண்டுள்ள எங்கள் பிரானே! நீவீர் பள்ளியெழுந்தருள வேண்டும் என்று கூறினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/94&oldid=592388" இலிருந்து மீள்விக்கப்பட்டது