பக்கம்:பாவைப் பாட்டு.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாவது திருப்பாடல்

சென்ற திருப்பாட்டில் கதிரவன் கீழ்த்திசையில் உதித்த தனையும், அதனால் விரிந்தகன்ற வானில் ஒளி பரவியதனை யும், முன்னிரவில் கூம்பியிருந்த தாமரை மலர்கள் விரிந்த தனையும், அது பொழுது தாமரைத் தேனை உண்டு திளைத் திருந்த வண்டுக் கூட்டங்கள் இன்னிசை பாடி நிற்கவும் ஆன வைகறைக் காட்சிகளை-இயற்கையின் இனிய பெற்றியினை எடுத்தியம்பிய மாணிக்கவாசகர், இத்திருப்பாட்டில், கூலின பூங்குயில் கூலின கோழி என்று மீண்டும் புலர் காலைப் பொழுதின் இனிய காட்சிகளைப் பாடத்தொடங்குகின்றார்.

‘தேவ’ என்று முதற்கண் சிளபெருமானை விளிக் கின்றார். தேவர்களின் தலைவனாக தேவதேவனாக-மகா தேவனாகச் சிவபெருமான் திகழும் சிறப்பினை முதலில் சொல்லிய மாணிக்கவாசகர் அவன் எளிவந்த தன்மையினை அடியவர் வேண்டுகோளை ஏற்று அவர் தம்மை ஆட் கொள்ளும் சிறப்பினை உணர்த்துவார் போன்று, “திருப் பெருந்துறையுறை சிவபெருமானே’ என்றார். இவ்வாறு குறிப்பிட்டதற்குக் காரணம் உலக உயிர்களை உய்விப்பான் வேண்டிய விண்ணவர் கோமான் மண்ணவர் தலைவனாக - ஆண்ணில் வாழ்பவர்களுக்கு உய்தி அளிப்பான் வேண்டி சிருப்பெருந்துறையுறை சிவபெருமானாகத் துலங்குகின்றான் பின்பர். இறைவனைக் காணவேண்டுமென்றால் அவன் *ைேன நம்மை வந்தடைய வேண்டும். அவன் அருள் தாளை ‘னங்குவதற்கே அவன் அருள் வேண்டுமென்றால், அவனை அறியவேண்டுமென்று ஆன்மாக்கள் விரும்பினால் எளிதில் *மியவொண்ணாதவனாக அவன் திகழ்கிறான் என்பதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/96&oldid=592393" இலிருந்து மீள்விக்கப்பட்டது