பக்கம்:பாவைப் பாட்டு.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 திருப்பள்ளி எழுச்சி

விளக்கப் புகுவாராய் “யாவரும் அறிவரியாய்’ என்றார் இக்கருத்தினை மாணிக்கவாசகரே தாம் இயற்றிய திருவம்மானைப் பாடலொன்றில் (2)

பாரார் விசும்புள்ளார் பாதாளத்தார் புறத்தார் யாராலுங் காண்டற்கரியார் எமக்கெளிய பேராளன்

என்று குறிப்பிட்டிருக்கக் காணலாம். பிறருக்கெல்லாம் அரியவனாக இருக்கும் ஆண்டவன், அவன் அடியவருக் கெல்லாம் அன்பின் காரணமாக எளியவனாக இருக்கிறான் என்பதனை இதன்வழி உணர்த்தினார். எனவே ‘எனக்கு எளியாய்’ என்றார். சென்ற பாடலிலும் இவ்வாறே ஐந்து வகையாக ஆண்டவனை விளித்தார் என்பதனை மனக்கொளல் வேண்டும்.

அடுத்து, காலைக் காட்சிகள் இத்திருப்பாடலில் இடம் பெறுகின்றன. வைகறைப்போதில் குயில்கள் கூவும் நிலை யினைக் குறிப்பிடுவாராய் ‘கூவின பூங்குயில்’’ என்றார். குயிற் பறவை குரலினிமைக்குப் பெயர்போன பறவையாகும். இதை உணர்ந்தே இந்த நூற்றாண்டில் வாழ்ந்த பாரதி ‘கத்தும் குயிலோசை சற்றே வந்து காதில் விழவேண்டும்’ என்று தம் ‘காணிநிலம் வேண்டும் பராசக்தி’ என்னும் பாடலில் பாடினார். மரப் பொதும்பரில் வாழும் குயில் தனக்கு மகிழ்ச்சி மீதுாரும் பொழுது இனிய குரலெடுத்து இனிமை ததும்பப் பாடும் பெற்றியுடைத்ததான பறவை யாகும். எனவே முதற்கண் குயில் கூவுவதனைக் குறிப் பிட்டார். குயில் வீட்டில் வளரும் பறவையன்று; அதைக் கூண்டில் வைத்தும் வீட்டுப் பறவையாக வளர்க்க முடியாது. அந்தக் காட்டுப் பறவையே முதற்கண் தீங்குரலெடுத்துப் பாடிவிட்ட பிறகு, நாட்டில் நல்லோர் வீட்டில் வளர்க் கின்ற கோழியும் கூவின என்பதனை உணர்த்துவான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/97&oldid=592394" இலிருந்து மீள்விக்கப்பட்டது