பக்கம்:பாவைப் பாட்டு.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 97

வேண்டி கூவின கோழி” என்றார். ஈண்டுக் கோழி என்பன வைகறைப் போதில் கொக்கரக்கோ’ என்று கூவும் மு,வலைக் குறிப்பதாகும். பிறிதொரு புரான விளக்கமும் கூறுவர். கொக்கு அறுகோ’ என்று சேவல் கூவுகின்றதாம். காரணம், கொக்கு-மாமரமாக நின்ற குரனை, அறுதுணித்து அழிக்கின்ற, கோ-தலைவனாம் இறைவன் முருகப் பெருமானை நினைந்து கூவுகிறதாம் சேவல். சுருங்கச் சொன்னால் சூரனை வதைத்த சுப்பிரமணிய கடவுளைப் பரவிநிற்கிறது சேவல் என்பர். “பொறிமயிர் வாரணம் வைகறை இயம்பி என்ற மதுரைக் காஞ்சி அடி. (673) சேவல் வைகறையிற் கூவி மக்களை எழுப்பும் திறம் சான்றது என்பதனை விளக்கும்.

குயில் கூவினது மட்டுமல்ல; சேவல் கூவியது மட்டுமல்ல, மற்ற பிற பறவைகளும் கூவின என்பதனை உணர்த்துவான் ‘குருகுகள் இயம்பின’ என்றார். குருகுகள் சிறு பறவை களைக் குறித்து நிற்கும். புலர் விடியற் போதில் அஃறிணை உயிர்களாகிய குயில், கோழி, குருகுகள் ஒலித்தன. ஆயின் ஆறறிவு படைத்த மனிதர்கள் இன்னும் எழவில்லையோ என்று வினவுவாரின் ஐயப்பாட்டினைத் தீர்ப்பார். சங்கினை முழக்க ஒருவர் வேண்டும். அது தானாக முழங்கும் திறமற்ற தாகும். திருப்பாவைப் பாட்டிலும் (14)

எங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்கெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண் செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்

வைகறையில் வைணவ அடியார்கள் திருக்கோயிலில் சங்கு சிேதிக்குவர் என்ற குறிப்புப் பெறப்படுகின்றது. ‘விருப்பொடு வெண்சங்கம் ஊதா ஊர்’ என்று நாவுக்கரசர் பெருமான் கிபி தனித்திருத்தாண்டகத்தில் (5) குறிப்பிடுவர். காப்பிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/98&oldid=592395" இலிருந்து மீள்விக்கப்பட்டது