பக்கம்:பாவைப் பாட்டு.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 திருப்பள்ளி எழுச்சி

ஆசிரியர், குணவாயிற் கோட்டத்து அரசு துறந்து இருந்த குடக்கோச் சேரல் இளங்கோவடிகளும்,

வால்வெண் சங்கொடு வகைபெற்றோங்கிய காலை முரசம் கணைகுரல் இயம்ப

என்று குறிப்பிட்டுள்ளார். கதிரவன் ஒளி வான வெளியில் பரவிய அளவில் விண்மீன்களின் ஒலி மழுங்கின என்பார். ‘து'ாவின தாரகை ஒளி, ஒளி உதயத்து ஒருப்படுகின்றது’ என்று குறிப்பிட்டார்.

இவ்வுளவும் கூறிவிட்டு மாணிக்கவாசகர் ‘தேவ! நற்

செறிகழல் தாளினை காட்டாய்” என்று சிவபெருமானின்

திருவடித் தாமரையினை வேண்டுகின்றார்,

இவ்வாறு குறிப்பிட்டுச் “சிவபெருமானே! திருப்பள்ளியி னின்றும் நீங்கி எழுந்தருளுங்கள்’ என வேண்டுகின்றார் மணிவாசகர்.

கூவின பூங்குயில்:

கூவின கோழி: குருகுகள் இயம்பின;

இயம்பின சங்கம், ஒவின தாரகை

ஒளி, ஒளி உதயத்(து) ஒருப்படு கின்றது;

விருப்பொடு நமக்குத் தேவாற் செறிகழற்

றாளிணை காட்டாய்! திருப்பெருங் துறையுறை

சிவபெரு மானே! யாவரும் அறிவரி

யாய்!எமக் கெளியாய்! எம்பெரு மான்!பள்ளி

எழுந்தரு ளாயே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவைப்_பாட்டு.pdf/99&oldid=592399" இலிருந்து மீள்விக்கப்பட்டது