பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பிடியும். களிறும்

வேய்புரை மென்ருேட் பசலையும் அம்பலும் மாயப் புணர்ச்சியும் எல்லாம் உடன்நீங்கச் சேயுயர் வெற்பனும் வந்தனன்;

பூஎழில் உண்கணும் பொலிகமா இனியே!

இது, தமர் வரைவு மறுத்துழித் தோழி தாய்க்கு அறத்தொடு நிற்ப், அவள் நற்ருய்க்கு அறத்தொடு நிற்ப, அவள் தன்னையர் முதலியோருக்கு அறத்தொடு நிற்ப, அவரும் ஒருவாற்ருன் உடம்பட்டமை தோழி தலைவிக்குக் கூறி, தானும் அவளும் வரைவு கடிதின் முடிதற்பொருட்டு வரையுறை தெய்வத்திற்குக் குரவை ஆட, அவன் வரைய வருகின்றமை தோழி தலைவிக்கு உரைத்தது.

இது கலித்தொகையில் இரண்டாவதாகிய குறிஞ்சியில் மூன்ருவது பாட்டு.

இதைப் பாடியவர் கபிலர்.