பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 பிடியும் களிறும்

"திருத்தமான அணிகலன்களை அணிந்த பெண்ணே! அதை நினைத்தால் சிரிப்புச் சிரிப்பாக வருகிறது” என்று தொடங்கிளுள். தலைவி எதைச் சொல்கிருய்?

தோழி : நேற்று இரவு நடந்த கூத்தைத்தான் சொல் கிறேன். ஊரெல்லாம் கூடிச் சிரிக்கவேண்டிய காரி யம் அது. வேடிக்கையாகத் தான் இருந்தது. ஆனல் அருவருப்பைத் தரும் இழிவான கருங் கூத்து. திருந்திழாய் கேளாய்: கம் ஊர்க்கெல்லாம் சாலும் பெருங்கை, அல்கல் கிகழ்ந்தது; (சாலும்-தகும். பெரு நகை-பெரிய வேடிக்கை. அல் கல்-இரவில்.)

தோழி சிரித்துக்கொண்டாள். தலைவி : என்ன நடந்தது? அதைச் சொல் விவிட்டுப் பிறகு சிரி, தோழி : நேற்று இரவு மக்கள் எல்லாம் ஒரேயடியாகத் தூங்கிப்போன நேரம்; நள்ளிரவு. அப்போது நான் நம் தலைவர் வருவாரே என்று புறப்பட்டேன்.அழகிய மெல்லிய துகிலாலான போர்வையை அழகாகப் போர்த்துக் கொண்டு இனிய சாயலைப் பெற்ற மார் பையுடைய தலைவர் வந்து நிற்கும் இடத்துக்கு அருகே போய் நின்றேன். அப்போது

- ஒருங்லையே மன்பதை எல்லாம் மடிந்த இருங்கங்குல்

அந்துகிற் போர்வை அணிபெறத் தை இநம் இன்சாயல் மார்பன் குறிகின்றேன். யாளுக.[ஒருநிலையே-ஒரு மாதிரியே. மன்பதை-மக்கட் கூட் டம். மடிந்த-செயலற்று உறங்கின. இருங்கங்குல்-கரிய நள்ளிருள். துகில்-மெல்லிய ஆடை, துகிலாகியபோர்வை. தைஇ-அணிந்து. சாயல்-மென்மை, மார்பன்-தலைவன்