பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருங்கூத்து 105

குறி-குறிப்பாக வந்து நிற்கும் இடம். யான் நின்றேனசு

என்று கூட்டவேண்டும்; யான் நிற்க என்பது பொருள்.)

தலைவி: அப்போது என்ன? -

தோழி; அதைத் தான் சொல்ல வருகிறேன், கேள். குட்ட நோயாளியான ஒரு பார்ப்பான் இந்தப் பக்கங்களில் சுற்றிக் கொண்டிருப்பானே

தலைவி; யார்?

தோழி அவன் நான், தலைமுழுதும் வழுக்கையாகிக் கம்பளிப் போர்வையும் தானுமாக வந்துநிற்பானேதலைவி. கருங் குட்டத்தால் கால் கை குறைந்து கறைப்

பட்டு வருவானே, அவன? தோழி: ஆம், ஆம்; அவனேதான் நம்முடைய வீதியிலே சுற்றிக் கொண்டிருப்பானே, அந்த முடப் பார்ப் பானைத்தான் சொல்கிறேன். தீரத் தறைந்த தலையும்தன் கம்பலும் காரக் குறைந்து கறைப்பட்டு வந்துகம் சேரியிற் போகா முடமுதிர் பார்ப்பான (தீரத் தறைந்த-முழுவதும் வழுக்கையான, தறைதல் தேய்தல். கம்பல்-கம்பலம். காரக் குறைந்து-கருநிறம் சேர அதளுேடு குறைந்து போய்; கார-கார்நிறம் அடைய கறைப்பட்டு-இரத்தக் கறையை உடையவளுகி.} தலைவி அவனைப் பற்றி இப்போது என்ன? தோழி: நான் சில சமயங்களில் அவனை இகழ்வேன். அப் போது, 'பாவம் அவனை ஏன் வைகிருய்? ஏதோ வேண்டியதைக் கொடுத்தனுப்பு, அவனைப் போன்ற வர்களைப் பாதுகாப்பது நம் கடமை' என்று சொன் ஞயே, நினைவு இருக்கிறதா? தோழிநீ போற்றுதி என்றி . (தோழி- தோழியே- போற்றுதி- பாதுகாப்பாயாக, என்றி-என்று சொன்னய்.1