பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1í2 பிடியும் களிறும்

கருமை பெற்றுக் குறைந்து கறைபட்ட உறுப்புடன்வந்து நம் தெருவினின்றும் போகாத முடவனகிய கிழப்பருவம் எய்திய பார்ப்பானை, 'தோழியே, நீ பாதுகாப்பாயாக’ என்று சொன்னப்.-அவன் அங்கே என்னைப்பார்த்து மொழி குழறிப் பணிவுடன் ஒழுகி, 'பொழுதெல்லாம் இங்கே நின்ற நீர் யார்?' என்று கூறி, மெல்ல வைக் கோலேக் கண்ட கிழட்டெருதைப் போலப் பக்கத்தினின் றும் போகாமல், 'பெண்ணே, தாம்பூலம் தின்கிரு. யா?” என்து தன் பையை அவிழ்த்து எடுத்து, "இந்தா, வாங்கிக் கொள்' என்று நீட்டவே, நான் யாதொன்றும் பேசாமல் நிற்க, அவன் விரைவில் எட்டிச் சென்று நின்று தன் செய்கையை மாற்றிக் கொண்டு, "சிறுமியாகிய நீ என் கையில் அகப்படுத்தப்பட்டாய்; ஆண் பிசாசு நான்; மற்றப் பிசாசுகளுக்குள் என்ன நீ நலிந்தால் இந்த ஊரில் தி பலிபெருமல் முழுவதையும் நானே பெற்றுக்கொண்டு ஒடுவேன்' என்று பலவற்றையும் பயம் தாங்காமல் வாயி குல் புலம்பி நிற்க, அந்தக் கிழப்பார்ப்பான் பயந்தவன தலை நான் உணர்ந்து. ஒரு கை நிறைய மணலை எடுத்துக் கொண்டு அவன் மேல் துரவ, அப்போது அதனேக் கண்டு, கடுமையாகக் கத்தி ஆரவாரம் செய்யத் தொடங்கினன். தலைவன் நம்மைக் காணும் காட்சி தடைபட للاسس (68 تبين نقا قري நம் ஊர்க்கெல்லாம் கேட்கும் ஆரவாரமாகி விளைந்த தாகிய இக்கூத்து-என்றும் இதுவே தன் வாழ்க்கையாகக் தொண்ட முது பார்ப்பானது வேட்கையைப் புலப்படுத் தும் பெரிய இழிவான கூத்தானது-குறையாத வலிமை பையும் வளைந்த நிறம் பெற்ற கோடுக்ளேயும் கடுமையான பார்வையையும் உடைய கரிய புலியைப் பிடிப்பவர்கள் கட்டிவைத்த வலையில் புலிக்கு அயலான ஒரு குள்ளநரி அகப்பட்டதுபோல் ஆயிற்று.)

இது தலைவன் சிறைப்புறமாகத் தோழி தலைவிக்குக் கூறியது. . -

கலித்தொகையில் குறிஞ்சியில் 29-ஆவது பாடல் இது: கபிலர் பாடியது.