பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடும் பெருமான்

கடவுள் நம்முடைய புலன்களால் அறியப்படாத நிலையில் இருப்பவர். அவரைப் பற்றி நாம் பேசி எல்லே காண முடியாது. எண்ணவும் இயலாது. வாக்குக்கும் மனத்துக்கும் அப்பாற்பட்டவர் கடவுள் என்று வேதம் சொல்கிறது; மற்ற நூல்களும் சொல்கின்றன. அவர் உருவம் இல்லாதவர்; அளவு இல்லாதவர்; குணங்கள் இல்லாதவர். ஆகையினால் பொறிகளால் உணரப் படாதவர்; மனத்தால் நினைக்க இயலாதவர். ஆயினும் உலகத்தில் உள்ள சமயங்களில் பெரும்பாலானவை, கடவுளை ஏதேனும் அடையாளம் ஒன்றையோ பல வற்றையோ வைத்துக் கொண்டு வழிபடும் முறையை ஏற்றுக் கொண்டிருக்கின்றன.

கண்ணுலே காண முடியாத சொற்களையும், அந்தச் சொற்களின் வாயிலாக உணரும் கருத்துக்களையும் எழுத் தால் எழுதிப் பிறருக்கு அறிவிக்கிருேம். உள்ளத்திலே தோன்றும் நினைவுகளையும் உணர்ச்சிகளையும் முதலில் வாயினுல் வெளியிடுகிருேம். அதுதான் மொழி அல்லது பாஷ்ை. பேசும் நிலையில் இருந்த மொழி நாளடைவில் எழுத்துருவமும் பெற்றது. பேசும் வடிவத்தை ஒலி வடிவம் என்றும், எழுதுவதை வரி வடிவம் என்றும் சொல்வார்கள். மனத்தில் வடிவமே இல்லாமல் பிறந்த நினைவுகளையும் உணர்ச்சிகளையும் முதலில் ஒலி வடிவத் திலே வடித்துப் பேசுகிருேம்; பிறகு வரி வடிவத்திலே