பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பிடியும் களிறும்

ஒன்றுதான். கல்லைக் குறிக்கும் சொல் வேறுபடுமே யொழியக் கல் வேறுபடாது.

கடவுளை வெவ்வேறு உருவத்தில் வெவ்வேறு . வகையில் மக்கள் வழிபட்டாலும் கடவுள் ஒருவரே. ஒரே மொழியில் சில பொருளுக்குப் பல பெயர்கள் இருப்பது போல ஒரே சமயத்தில் கடவுளை வெவ்வேறு உருவங்களால் அன்பர்கள் வழிபடுவது உண்டு. அதல்ை கடவுளர் பலர் என்று கொள்வது கூடாது. அந்த உருவங்கள் உட்கருத்தைக் கொண்டவை . கடவுளின் தன்மையை உணர்ந்த சான்ருேர்கள் அவருடைய திருவருளையே துணையாகக் கொண்டு அநுபவத்தில் உணர்ந்து வெளியிட்டவை. கல் என்ற சொல் எப்போது யாரால் உண்டாயிற்று என்று தெரியாவிட்டாலும் பல காலம் அதையே சொல்லிச் சொல்லிப் பழகிவிட்டோம். அப்படியே கடவுளின் திருவுருவங்களாக நாம் வணங்கும் விக்கிரகங்கள் பல காலமாகப் பெரியவர்களால் வழிபடப் பெற்று வரு கின்றன. அவற்றை வழிபட்டு அவர்கள் பயன் பெற் றிருக்கிருர்கள். ஒரு பொருளின் மதிப்பு அதனல் உண்டாகும் பயனைப் பொறுத்தது. இந்தத் திருவுரு வங்களும் வழிபாட்டு முறைகளும் ஞானம் பெறவும் கடவுள் அருளை அடையவும் பல பெரியேர்களுக்குப் பயன்பட்டிருத்தலால் இவற்றை நாமும் மேற்கொண்டு வருகிருேம்.

நம்முடைய நாட்டில் சிவபெருமானையும் திருமாலை யும் அதிகமாக வழிபடுகிருேம். சிவபெருமானை வழிபடு கிறவர்களைச் சைவர்களென்றும், திருமாலை வழிபடுகிற வர்களை வைணவர்கள் என்றும் குறிக் கிருேம், சைவர்கள் சிவபெருமான், விநாயகர், முருகன், அம்மை முதலிய