பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பிடியும் களிறும்

"கற்பம் கைசந் தம் கால் எண்கண் தெற்றென் நிருத்தம் செவிசிக்கை மூக்கு உற்ற வியாக ரணமுகம் பெற்றுச் சார்பிற் ருேன்ரு ஆரண வாக்கு”

என்று மணிமேகலை (27, 100-03) இந்த ஆறங்கங்களைப் பற்றியும் சொல்லும்.

ஆறு அங்கங்களையும் நன்கு தேர்ந்த அந்தணர் களாகிய முனிவர்களுக்காகப் பலவாகிய வேதங்களை அருளிச் செய்தான் இறைவன். அந்த மறைகள் அரும் பொருள் பல அமைந்து, யாவரும் எளிதிலே அறிவதற்கு அரியவை.

ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து

என்று புலவர் பாடுகிரு.ர்.

'ஆறு அங்கத்தையும் அறியும் அந்தணர்க்கு, அரிய வாகிய வேதங்கள் பலவற்றையும் அருளிச் செய்து’ என்று நச்சிஞர்கினியர் உரை எழுதினர். .

இதற்கு வேறு வகையாகவும் பொருள் கொள்ளலாம். வேதத்தை அறிந்து அதன் வாயிலாக மெய்ப்பொருளை உணரும் ஆவலோடு அந்தணராகிய முனிவர் முயன்ருர் கள். வேதப் பொருளை நன்கு தேற உரிய கருவிகளாகிய ஆறு சாஸ்திரங்களையும் நன்முக அறிந்தார்கள். அப்படி அறிந்தும் வேதத்தின் பல பகுதிகள் அவர்களுக்குப் புலகைவில்லை, வேதங்களில் தெளிவாகாத அருமறை பல இருந்தன. அவற்றை விளக்கும் ஆசான் அவர் களுக்குக் கிடைக்கவில்லை. இறுதியில் தென்முகம் நோக்கி எழுந்தருளியிருந்த இறைவனிடம் சென்று தாம் . கற்றும் கேட்டும் அறியவொண்ணுமல் இருந்த மறைப் பொருளேத் தெளிந்தனர். ஆகவே, ஆறு அங்கங்களை