பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடும் பெருமான் i3

நன்கு தேர்ந்த அந்தணருக்கு, தம் அறிவாற் றலால் தெளியப்பெருத அரிய இரகசியங்கள் பலவற்றைப் பகர்ந்தவன் இறைவன் என்றும் இங்கே பொருள் கொள்ளலாம்.

“ஒருமுகம், எஞ்சிய பொருளே ஏமுற நாடித் திங்கள் போலத் திசைவிளக் கும்மே'

என்பது திருமுருகாற்றுப்படை. ‘ஒருமுகம் ஈண்டு வழங்காத வேதங்களிலும் நூல்களிலும் உள்ள பொருள்களை ஆராய்ந்து இருடிகளை ஏமமுறும்படி உணர்த்தித் திங்கள் போலத் திசைகளெல்லாம் விளக்கு விக்கும்’ என்று அதற்கு நச்சினர்க்கினியர் பொருள் எழுதியிருக்கிரு.ர்.

இறைவனுடைய திருவிளையாடல்களை நினைக்கப் புகுந்த புலவர் முதலில் அவன் அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்ததைச் சொல்கிரு.ர். அப்பால் கங்கையைத் தன் சடையில் ஏற்றதைச் சொல்கிருர், பகீரதன் வேண்டக் கங்கையை எம்பெருமான் தன் சடையிலே ஏற்ருன். 'என்னைத் தாங்குவாரும் உண்டோ?' என்று செருக்குடன் வந்த கங்கையை ஒரு சடையில் ஏற்ரு:ன். அது அந்த ஒரு சடையையே நனேக் கப் பற்ருமல் அதனுள் அடங்கி ஒடுங்கியது. கங்கையைத் தன் சடை ஒன்றில் கரந்தருளின அற்புதச் செயலை இறைவன் செய்தான்.

பிறருக்குத் தூய்மையைச் செய்யும் கங்கை செருக் குற்றுத் தூய்மையை இழந்தது. அதைத் தன் சடை யிலே கரந்து தூய்மை செய்தான் இறைவன்; பிறகுதான் அது பகீரதனுடைய முன்னேர்களின் என் பின் மேற் பாய்ந்து புனிதமாக்கும் இயல்பு பெற்றது.