பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பிடியும் களிறும்

"புரிசடைமேற் புனலேற்ற புனிதன் தான்காண்”

என்று திருநாவுக்கரசர் பாடுகிரு.ர். புனிதப் புனல் ) என்று சொல்லும் கங்கை செருக்கிளுல் புனிதத்தை இழத்தபோது அதைப் புரிசடைமேல் ஏற்று மீட்டும் அதற்குப் புனிதம் அளித்த புனிதன் அவன்.

'உந்தி அம்புயத் துதித்தவன் உறை தரும் உலகும் இந்தி ராதியர் உலகமும் நடுக்குற இரைந்து வந்து தோன்றினள் வரநதி; மலைமகள் கொழுநன் சிந்தி டாதொரு சடையினிற் கரந்தனன் சேர'

என்பது கம்பர் வாக்கு (அகலிகைப் படலம், 55.)

முன்பு தெளிந்திருந்த கங்கை நீரை, இடையிலே புகுந்த செருக்கை மாற்றித் தன் சடையிலே கரந்தவன் சிவபெருமான்,

தேறு நீர் சடைக் கரந்து.

அந்தனருக்கு அருளிய அருட் செயலே முதலில் சொல்லி, அப்பால் கங்கையை ஒறுத்து ஏனையோருக்கு நலம் உண்டாக அருளிய செயலைப் பின்பு சொன்னர் புலவர். பிறகு திரிபுரத்தைத் தீமடுத்த திறலை நினைக்கிரு.ர்.

இரும்பு, வெள்ளி, பொன் என்ற மூன்று மதில் களையுடைய மூன்று நகரங்களை மூன்று அசுரர்கள் ஆண்டனர். அந்த மூன்றும் பறக்கும் நகரங்கள். தாம் நினைத்தபடியெல்லாம் பறந்து சென்று அப்படியே கீழி றங்கி அந்த நகரங்களால் பூமியின் பகுதிகள் நசுக் குண்டு அழியும்படி செய்தும், தேவர்களுக்கு இன்னல் புரிந்தும் அவ்வசுரர்கள் வாழ்ந்தனர். அந்தத் திரிபுரங்களையும்