பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பிடியும் களிறும்

பெயர்த்துத் தன்னிடம் மீட்டுக் கொண்டு, எல்லாக் குழந்தைகளும் ஒரு சமயத்தில் தன் அருகில் இருக்கும் போது களிக்கும் தாய்போலக் களிப்படைகிருன். ஆளுக்கு ஒர் ஊரில் அலுவல் பார்க்கிற பல பிள்ளைகள் பல காலத் துக்குப்பின் ஏதோ ஒரு காரணமாகத் தாய் தகப்பன் இருக்கும் இடத்திலே வந்து ஒன்று கூடினல் அவர்களுக்கு இன்பம் உண்டாவது இயல்புதானே?

இங்கேகூடப் பல உயிர்களுக்கும் தந்தையாகிய இறைவனும், தாயாகிய தேவியும் இருக்கிரு.ர்கள். இரண்டு பேருமே ஆனந்தம் அடைகிரு.ர்கள். இறைவன் ஆடிக் களிக்கிருன்; இறைவி அவனுடைய இடப்பாகத்தே ஒன்றியிருந்து தாளம் கொட்டிக் களிப்பை அடைகிருள்.

இறைவன் உயிர்களையெல்லாம் பேரூழிக் காலத் தில் தன்னிடம் அடக்கிக் கொண்டு ஆடும் கூத்துக்குக் கொடுகொட்டி என்று பெயர். அவன் ஆனந்தத்தால் கைகொட்டி ஆடுகிருன். அதல்ை கொட்டி என்ற பெயர் வந்தது. உயிர்கள் அழிந்த காலம் அது என்ற நினைவை வைத்துப் பார்த்தால் அது கொடுமையாகத் தோற்றுகிறது. அதனல் கொடு கொட்டி என்ற பெயர் அமைந்தது. கொட்டிச் சேதம் என்றும் சொல்வது உண்டு.

கொடுகொட் டி ஆடும்போது இறைவன் தன் கையில் உள்ள துடியை முழக்குகிருன். அந்த உடுக்கை பலவேறு ஒலிகளை எழுப்புகிறது. இறைவன் குதித்தும் சுழன்றும் பாய்ந்தும் ஆடும் ஆட்டங்களுக்கு ஏற்ப வெவ்வேறு ஒலி களே அந்தத் துடியாகிய பறை இயம்புகிறது. அவனுடன் ஒரு கூற்றிலேயிருந்து கொடிபோலத் துவண்ட இடையை யுடைய அம்மை தாளம் கொட்டு கிருள்.

  • கொடுங் கொட்டி, கொடு கொட்டி என விகார மாயிற்று. கொடுங்கொட்டி யென்ருர், எல்லாவற்றை யும் அழித்து நின்று ஆடுதலின் என்பர் கச்சிஞர்க்கினியர்.