பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடும் பெருமான் 3?

துடி முழங்கக் கொடுகொட்டி ஆடினதையும், நீறணிந்து பாண்டரங்கம் ஆடியதையும் சொன்ன புலவர் இப்போது காபாலக் கோலத்தை வருணிக்கிரு.ர்.

இறைவன் செருக்குடையவருக்கு அருள் செய்யாத வன். செருக்குடையவர்களுக்கு அவன் தன்மை விளங் காது, செருக்கு, பணத்தால் வரலாம்; பதவியால் வரலாம்; படிப்பால் வரலாம்; தவத்தால்கூட வரலாம் . செருக்குக்குக் காரணம் எதுவானுலும் செருக்குச் செருக் குத்தான். கட்டை குத்தினுலும், முள் குத்திகுலும், ஆணி குத்திகுலும் புண் புண் தானே? இவன் படித்தவன்; அதல்ை இவனுக்குச் செருக்கு இருப்பது அழகு தான்' என்று சொல்ல வொண்ளுது. இது பொன்னலான ஆணி தான்; ஆகையால் இதனுல் வந்த புண் பூண்பதற்குரியது' என்று யாராவது சொல்வார்களா?

தாருகாவனத்தில் பல முனிவர்கள் இருந்தார்கள். அவசிகன் வேள்வித் துறையில் தலைசிறந்தவர்கள்; விரதம் இருத்து தவம் புரிந்தவர்கள். ஆலுைம் அவர்களுக்கு "நாம் என்ற செருக்கு இருந்தது. தவம் வளர வளர, வேள்வி மல்க மல்க, அந்தச் செருக்கு வளர்ந்தது, அதைப் போக்க இறைவன் வந்தான். அவன் பெருமையை அறியாது, தங்கள் பகைவன் என்று கருதித் தீய வேள்வி களைச் செய்து பல பொருள்களே உண்டாக்கி அவன்மேல் விடுத்தார்கள். அவனே அவை அழித்துவிடும் என்ற எண்ணம் அவர்களுக்கு, இறைவன் அவற்றை யெல்லாம் பிடித்து வைத்துக் கொண்டான். செருக்கு அடைபவர் களுக்கு என்ன க தி நேரும் என்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்ளட்டுமென்று அவற்றை அடையாளமாக வைத்துக் கொண்டான். அவர்கள் பாம்பை அனுப்பிஞர் கள்; அதைப் பிடித்து அணியாக அணிந்து கொண்டான். புலியை விடுத்தார்கள். கொலை செய்ய வேண்டுமென்று வந்த உழுவை அது. அதனை உரித்து அதன் தோலை இடையிலே கட்டிக் கொண்டான், தோலாண்டியான்ை,